• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி-கண்டிப்பா பார்க்கணும்! X Review

சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி-கண்டிப்பா பார்க்கணும்! X Review

Written ByYuvashree M
Published: Sep 10, 2026, 01:46 PM IST|Updated: Sep 10, 2026, 02:07 PM IST
joinshare
நடிகர் சூரி நடித்திருக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பு என்ன? இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சூரி, தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். விடுதலை படத்தின் இரு பாகங்களை தொடர்ந்து, தாய் மாமன் படம் மூலமாகவும் மக்களை கவர்ந்த இவர், தற்போது மண்டாடி படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்கள் என்ன தெரியுமா?

Tamil movie releases for the Vinayagar Chaturthi holiday1/5

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தமிழ் படங்கள் ரிலீஸ்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினமாக இருக்கிறது. இதை குறிவைத்து மண்டாடி, சர்தார் 2 என தமிழில் பல படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில், சூரியின் மண்டாடி திரைப்படம் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் படங்களுள் ஒன்றாக இருக்கிறது.
Full details about the movie Mandadi2/5

மண்டாடி திரைப்படம் குறித்து முழு விவரம்

சூரி ஹீரோவாக நடிக்க, அவருடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவிந்திரா விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம்தான் மண்டாடி. இந்த படத்தை மதிமாறன் இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் சுமார் 75 கோடி அளவிளான பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மண்டாடி திரைப்பட எக்ஸ் விமர்சனம்3/5

Mandaadi Movie X Review By Fans

மண்டாடி திரைப்படத்தின் முதல் பாதி கொஞ்சம் இழுவையாக இருந்தாலும், இரண்டாம் பாதி வந்ததும் இத்திரைப்படம் வேற லெவலுக்கு இருப்பதாகவும், ஃப்ளேஷ் பேக் கொஞ்சம் நீளமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதையும் தாண்டி படத்தின் வேகம், படகு ரேஸின் போது சூடுபிடிக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
மண்டாடி விமர்சனம் - நாமும் கடலில் இருப்பது போன்ற உணர்வு4/5

Mandadi Review A feeling as if we, too, are out at sea

மண்டாடி படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டிருக்கும் ஒரு ரசிகர், ”கடல் பின்னணியில், பாய் மர படகு போட்டி கதைகளத்தில் அற்புதமான படம். அந்த போட்டிகளை பார்க்கும்போது நாமும் கடலில் இருக்கிற, துடிக்கிற பரபரப்பு உணர்வு ஏற்படுகிறது..சூரி, ஒளிப்பதிவாளர், பைட் மாஸ்டர், ,படக்குழு கடின உழைப்புக்கு வெற்றி கோப்பையை பரிசாக அள்ளுவது நிச்சயம்” என குறிப்பிட்டிருக்கிறார்.
மண்டாடி விமர்சனம்-கண்டிப்பாக பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து5/5

Mandaadi Review-Fans say A Must Watch

மண்டாடி திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள் என்று, படத்தை பார்த்து விட்டு வந்த ரசிகர்கள் தெரிவித்து இருக்கின்றனர். படத்தின் விஷுவல் மற்றும் இசை குறித்தும் அனைவரும் பேசி வருகின்றனர்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு: தமிழக அரசின் புதிய சட்டம்!

கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு: தமிழக அரசின் புதிய சட்டம்!

2

சிறு வியாபாரிகளுக்கு குட் நியூஸ்: தமிழ்நாடு அரசின் Self-Declaration புதிய விதி!

3

2027 Gold Prediction: 10 கிராம் தங்கம் விலை இவ்வளவா? இரண்டே மாதங்களில் காத்திருக்கும் ஷாக்!

4

பயிர்க்கடன் யாருக்கெல்லாம் கடன் முழுசா தள்ளுபடியாகும்? தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு Explained

5

உள்கட்டமைப்பு பணிகளுக்கு புதிய நிறுவனம்! தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.