• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /SIIMA விருது 2026 விருது..சமுத்திரகனி-சசிகுமாருக்கு விருது! இதோ முழு விவரம்..

SIIMA விருது 2026 விருது..சமுத்திரகனி-சசிகுமாருக்கு விருது! இதோ முழு விவரம்..

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.

Written ByYuvashree M
Published: Sep 15, 2026, 06:01 PM IST|Updated: Sep 15, 2026, 06:09 PM IST
joinshare
SIIMA விருது 2026 விருது..சமுத்திரகனி-சசிகுமாருக்கு விருது! இதோ முழு விவரம்..
Image Credit: Sasikumar | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

SIIMA விருது

ஒரு கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் தனிச்சிறப்பு. கதாபாத்திரங்களும் மொழிகளும் மாறினாலும், அவரது நடிப்பின் தனித்துவம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.

இந்த அங்கீகாரத்தை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அண்ணா அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்தார்? சுவாரஸ்ய தகவல்கள்..!

சமுத்திரகனி

நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, மற்றும் ராஜன் வகையறா , முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மஞ்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார்,கிச்சா சுதீப் , மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | உப்பு சப்பே இல்லாத விஷயம்! தலைவனை குறை சொன்னது குத்தமா? விஜய் சேதுபதி பஞ்சாயத்து..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema