’சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்தேன்..’ உருக்கமாக பேசிய பிரபல பாடகர்! தெருக்களில் உலாவி வீடியோ
தமிழ் திரையுலகில் முக்கிய பாடகர்களுள் ஒருவராக இருப்பவர், அந்தோணி தாசன். இவர்தான், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, நாட்டுப்புற பாடல்கள் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருபவர், அந்தோணி தாசன். இவர் படங்களில் மட்டுமல்லாமல் மேடைகளிலும் பாடி வருகிறார். இவர் தான் சிறு வயதில் அனுபவித்த வலிகளையும், தான் வளர்ந்த ஊர் குறித்தும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
யார் இந்த அந்தோணி தாசன்?
அந்தோணி தாசன், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ரெட்டிப்பாளையம் எனும் ஊரை சேர்ந்தவர். இவருக்கு, நாட்டுப்புற இசை, தெருக்கூத்து, கரகாட்டம் என பல கிராமிய கலைகளோடு அவருக்கு நெருங்கிய தொடர்பும் இருக்கிறது. இவருடைய தந்தை, ஒரு நாதஸ்வர கலைஞர், இதனாலேயே அவருக்கு சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற கலைகள் மற்றும் அது சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார், அந்தோணி தாசன். அவர் அப்படியே படிப்படியாக சினிமாவில் நுழைந்தாரா என்று கேட்டால் கிடையாது. அதற்கு பின், எண்ணிலடங்கா சோகங்களும் தியாகங்களும் இருர்க்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?
அந்தோணி தாசன், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில், தான் வளர்ந்த ஊரின் தெருக்களில் நடந்தபடி அவர் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்த பகுதிகளை பார்க்கும் போது, தன்னுடைய சிறுவயது நினைவுகள் நியாபகம் வருவதாகவும், அப்போது தான் பட்ட கஷ்டங்கள் தனக்கு கண் முன் வந்து நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | 6 நாட்களில் ரூ.541 கோடி வசூல்.. ரஜினியின் 'ஜெயிலர் 2' ரூ.1,000 கோடியை எட்டுமா?
”இளையான்குடி கரும்பக்கூட்டம், இதுதான் என் ஊரு, கணவன் இல்லாத கண்ணு தெரியாத ஒரு தாய், தன் குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்த ஊரு. அந்த கண்ணு தெரியாத தாய்க்கு பிறிந்த மகன்தான் நான். இந்த தெருதான், நான் சோத்து பிச்சை எடுத்த தெரு. சோறுபிச்சை எடுத்த ஊருஇது,என் குடும்பத்தை பார்த்துகிட்ட இந்த ஊர் மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவிலேயே, அவர் கண் கலங்குவதும் வைரலாகி இருக்கிறது. இவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
எப்படி பிரபலமானார்?
அந்தோணி தாசனை சினிமாவில் பிரபலமாக்கியது, ‘சூது கவ்வும்’ திரைப்படம்தான். இவர், இந்த படத்தில் ‘காசு பணம் துட்டு Money Money' எனும் பாடல்தான். இந்த பாடலில் அவருடைய குரல் பலர் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து, பல படங்களில் நாட்டுப்புற இசை கலந்த பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பாக, ஜிகர்தண்டா படத்தின் பாடல்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட அப்டத்தில் அவர் பாடியிருந்த ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ உள்ளிட்ட பாடல்களும் அவரது குரலை மிகவும் பிரபலமாக்கியது.
தவெகவுடனான இணைப்பு!
அந்தோணி தாசனுக்கும், தவெக அரசுக்கும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நட்பு இருக்கிறது. இவர், தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்னரே அந்த கட்சியின் மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். இதனால் அவ்வப்போது இவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாது அவர், மென்மேலும் சினிமா வாய்ப்புகளை பெற்று பாடி வருகிறார்.