SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அரசியலில் களமிறங்கும் தனுஷ்..உள்ளாட்சி தேர்தலில் போட்டியா? புதுக்கதையா இருக்கே..

நடிகர் தனுஷ், விரைவில் அரசியலில் இறங்கப்போவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 07, 2026, 10:54 AM IST | Updated: Oct 07, 2026, 11:07 AM IST
Join

தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக வலம் வருபவர், தனுஷ். பல்வேறு படங்களில் இவர் பிசியாக நடித்து வந்தாலும், தன்னை சுற்றி எப்போதும் அரசியல் சர்ச்சைகள் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறார். அந்த வகையில், அவர் குறித்த சமீபத்திய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவும் அரசியலும்..

தமிழ் திரையுலகை பொருத்தவரை, யாரெல்லாம் டாப் ஹீரோக்களாக இருக்கின்றனரோ, அவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து விடுவர். இது ஆண் நடிகர்களுக்கு மட்டுமல்ல, பெண் நடிகர்களுக்கும் பொருந்தும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என ஆரம்பித்து இப்போது முதல்வர் விஜய் வரை அனைவருமே அரசியல் பின்புலத்திலிருந்து வந்தவர்கள்தான். அந்த வகையில் தற்போது புதிதாக நடிகர் தனுஷும் அரசியலுக்குள் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷின் கட்சி!

ஏற்கனவே, தனுஷின் ரசிகர் மன்றம் சார்பில், பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, மன்ற நிர்வாகிகளையும் அவ்வப்போது நடிகர் தனுஷ் சந்தித்து ஆலோசனை ந்டத்தி வருகிறார்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின் படி, தனுஷ் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்ற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ், தற்போது தன்னுடைய அரசியல் கட்சியான பெயர் என்ன என்பதையும் அவர் தேர்ந்தெடுத்து இருக்கிறாராம். அந்த கட்சிக்கு அவர், ‘தமிழக எழுச்சி கழகம்’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. விரைவில், இது குறித்த அறிவிப்பினை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பிக்பாஸ் 10 : எவிக்ட் ஆன சவின்யா..அஸ்மிதாவை வசை பாடி வீடியோ! என்ன மேட்டர்?

தன்னுடைய ரசிகர் மன்றத்தை சமீபத்தில் மாவட்ட ரீதியாக பிரித்து, மாவட்ட தலைவர்களை தனுஷ் நியமித்திருக்கிறார். தொகுதி வாரியாகவும் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைப்பெற்று வந்தது. இதற்கிடையில், தலைமை தேர்தல் கமிஷனில், புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷ் சார்பில் பதிவு செய்திருக்கும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குகிறாரா?

தனுஷ் ஆதரவாளர்கள் தரப்பிலும், இது குறித்த சில செய்திகள் பரவி வருகிறது. தீவிர அரசியலில் ஈடுபடவிருக்கும் தனுஷ், விஜய் போலவே கட்சி தொடங்கி வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்று, நேரடியாகவே வரும் 2031 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் கட்சியை தொடங்கினாலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்பது உறுதி ஆகிறது.

ரஜினிக்கு வர்க்-அவுட் ஆகாதது..தனுஷுக்கு செட் ஆகுமா?

தனுஷின் முன்னாள் மாமனாரான ரஜினிகாந்த், பல ஆண்டு காலமாக தான் அரசியலுக்கு வருவதாக பேசிவிட்டு, அரசியலுக்கு வருவதாகவும் கூறிவிட்டு, கடைசியில் தன் அரசியல் பயணத்தை தொடங்கும் முன்னரே முடித்துக்கொண்டார். இதையடுத்து, அவர் அரசியல் கருத்துகளை கூட இப்போது எங்கும் வெளியில் பேசுவதில்லை. தற்பாேது தனுஷும் அதே அரசியல் ரூட்டை எடுப்பதால், முன்னாள் மாமனாருக்கு கைக்கொடுக்காத பாதை இவருக்கு கை காெடுக்குமா? என்பது குறித்து அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 திரைப்படத்தில் AI எடிட்டா..? இதை கவனிச்சீங்களா..? இதோ விவரம்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES