SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: HRA முதல் சம்பள உயர்வு வரை... மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முக்கிய அப்டேட்ஸ்

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் நடவடிக்கைகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. இந்த குழு மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் தாக்கம் நாட்டின் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும்.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 07, 2026, 04:05 PM IST | Updated: Aug 07, 2026, 04:07 PM IST
Join

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் இவர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

துரித கதியில் 8வது ஊதியக் குழுவின் பணிகள்

8வது ஊதியக் குழுவின் நடவடிக்கைகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. இந்த குழு மூலம் எடுக்கப்படும் தீர்மானங்களின் தாக்கம் நாட்டின் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மீது இருக்கும்.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இக்குழு, ஊழியர் அமைப்புகள், சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

குறிப்பாக, அடிப்படை சம்பள உயர்வு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் (fitment factor), வீட்டு வாடகைப்படி (HRA) ஆகியவற்றில் ஏற்படவுள்ள மாற்றங்கள் மீது அனைவரின் கவனமும் உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு தொடர்பான 5 மிக முக்கியமான மற்றும் சமீபத்திய தகவல்கள் பற்றி இங்கே காணலாம்:

1. 8வது ஊதியக் குழுவின் தொடர் கூட்டங்கள்

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளிடமிருந்து கருத்துகள் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெற்ற பிறகு, 8-வது ஊதியக் குழு அவர்களுடனான நேரடிச் சந்திப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

2. ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஊதியத்தைத் தீர்மானிப்பதற்கான முக்கிய சூத்திரமான ஃபிட்மென்ட் ஃபாக்டரை சுற்றியே அனைவரது கவனமும் உள்ளது. 8-வது ஊதியக் குழு தொடர்பான விவாதங்களில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

3. அலவன்சுகளில் ஏற்றம்

வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பிற படிகளில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன், வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி (TA) மற்றும் பிற படிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும்.

4. ஆண்டு ஊதிய உயர்வில் ஏற்றம்

ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை 3%-லிருந்து 6%-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கூட்டு ஆலோசனைக் குழு (NC-JCM) உள்ளிட்ட பல்வேறு ஊழியர் சங்கங்கள், ஆணையத்திடம் மனுக்களை அளித்துள்ளன.

5. 8வது ஊதியக் குழுவின் அமலாக்கம் மற்றும் நிலுவைத் தொகை

8வது ஊதியக் குழுவின் அமலாக்க தேதி பற்றி அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இதை பொறுத்து அவர்களது அரியர் தொகையும் தீர்மானமாகும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES