• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /இந்தியாவின் 5 சிறந்த நகரங்கள்... அதிக சம்பளம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை - எது பெஸ்ட்?

இந்தியாவின் 5 சிறந்த நகரங்கள்... அதிக சம்பளம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை - எது பெஸ்ட்?

Best 5 Indian Cities: ஐடி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம், சம்பள வாய்ப்பு, வாழ்க்கை செலவு, போக்குவரத்து, கல்வி, வாழ்க்கை தரம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, இந்தியாவின் சிறந்த 5 நகரங்களை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 09, 2026, 12:05 AM IST|Updated: Aug 09, 2026, 12:17 AM IST
joinshare
இந்தியாவின் 5 சிறந்த நகரங்கள்... அதிக சம்பளம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை - எது பெஸ்ட்?

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Best 5 Indian Cities To Work, Lifestyle : இந்தியாவில் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு நகரும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு ஆண்டும் திருநெல்வேலியில் இருந்து சென்னையை நோக்கி வருபவர்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் படித்து பட்டம் பெற்றபின் சென்னையை நோக்கி வருகிறார்கள் என்றால், வட மாநிலங்களில் இருந்து சென்னை, கோவை, மதுரை உள்ள தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களை நோக்கியும் பலர் வருகிறார்கள்.

சிறந்த 5 இந்திய நகரங்கள்

பெரியளவில் படிக்காதவர்களை போலவே இதில் பட்டம் பெற்றவர்களின் நிலையும் மிகவும் சிக்கலானதுதான். பொதுவாகவே வேலைக்காகவும், நல்ல வாழ்க்கைமுறைக்காகவும் நகரத்தை நோக்கி செல்ல நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கும்.

எந்த அடிப்படையில் 5 நகரங்கள்...?

எந்த நகரத்தில் வேலைவாய்ப்பும் அதிகம், சம்பளமும், வாழ்க்கை செலவும் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்? என்பதுதான் அந்த கேள்வி. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளரச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம், சம்பள வாய்ப்பு, வாழ்க்கை செலவு, போக்குவரத்து, கல்வி, வாழ்க்கை தரம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, இந்தியாவின் சிறந்த 5 நகரங்களை இங்கு காணலாம்.

இந்த பட்டியல் ஒரே ஒரு தரவரிசையின் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது அல்ல. இந்திய அரசின் Ease of Living Index, Mercer-ன் Quality of Living Ranking ஆகியவற்றின் அடிப்படையிலும், பல்வேறு காரணங்களை ஒப்பிட்டு இந்த 5 நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தரவரிசை அல்ல.

பெங்களூரு

  • இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக பெங்களூரு இருக்கிறது.
  • இங்கு IT, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், பின்டெக், பயோடெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
  • பல முன்னணி IT நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்அப்கள் இங்கு இருப்பதால், இளைய தலைமுறையினருக்கு இங்கு அதிக வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
  • அனுபவம் அதிகரிக்கும் வேளையில் சம்பளமும் வேகமாக உயரக்கூடிய வாய்ப்புள்ளது.
  • அதேநேரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல், வீட்டு வாடகை, வாழ்க்கை செலவு ஆகியவை நெகடிவ் எனலாம். அதிக சம்பளமே கிடைத்தாலும் உங்களுக்கு நகரின் சில பகுதிகளில் வாடகை அதிகமாக இருப்பது முக்கியமான குறையாகும்.

புனே

  • மகாராஷ்டிராவின் முக்கிய கல்வி மற்றும் ஐடி நகரமாக புனே விளங்குகிறது. மாணவர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்களுக்கு இது ஏற்ற நகரமாகவே உள்ளது.
  • ஐடி மட்டுமின்றி ஆட்டோமொபைல், தயாரிப்பு ஆலைகள், பொறியியல் மற்றும் கல்வி துறைகளிலும் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள் உள்ளன.
  • மும்பையை விட வாழ்க்கைச் செலவு குறைவாக இருக்கும் நகரம் புனே. வேலை மற்றும் வாழ்க்கை தரத்திற்கு இடையே சமநிலை தேடுபவர்களுக்கு புனே நல்ல ஆப்ஷனாகும்.
  • இங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையாக இருக்கிறது. சில பகுதிகளில் வீட்டு வாடகையும் அதிகம்.

மும்பை

  • இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக மும்பை விளங்குகிறது. பேங்கிங், பைனான்ஸ், ஊடகம், சினிமா, Investment Banking உள்ளிட்ட துறைகளின் முக்கிய மையமாக மும்பை உள்ளது.
  • அதிக சம்பளம் பெறக்கூடிய பல்வேறு வேலைவாய்ப்புகள் மும்பையில் இருக்கின்றன. பைனான்ஸ் மற்றும் Investment Banking துறையில் முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுபவர்களுக்கு வருமான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.
  • ஆனால், அதேபோல் வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவை மிக அதிகம். அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே மும்பை சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த சம்பளத்தில் வாழ விரும்புபவர்களுக்கு சவால்கள் அதிகம்.

ஹைதராபாத்

  • தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. ஐடி, பயோடெக்னாலஜி, ஹெல்த்கேர், நிதி சார்ந்த சேவைகள், பார்மா போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
  • பெங்களூரு நகருடன் ஒப்பிடும்போது சில பகுதிகளில் வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவு சற்று குறைவாகவே இருக்கும். இதுவே ஹைதராபாத் நகரின் முக்கிய பாயிண்டாக உள்ளது.
  • இன்னும் புதிய வேலைவாய்ப்புகள் அடுத்தடுத்து உருவாகி வரும் நிலையில், எதிர்காலத்தில் இங்கு நல்ல வாய்ப்புள்ளது.
  • சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர விரிவாக்கத்தால் ஏற்படும் நீண்ட நேர பயணம் ஆகியவை மைனஸ்.

சென்னை

  • தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், தயாரிப்பு நிறுவனங்கள், ஹெல்த்கேர், பேங்கிங் மற்றும் ஐடி போன்ற பல துறைகளிலும் வலுவான வேலைவாய்ப்பு இருக்கிறது.
  • கல்வி பின்னணி கொண்டவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  • இந்தியாவின் பல பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது, சில பகுதிகளில் மட்டும் வீட்டு வாடகை மற்றும் அன்றாடச் செலவுகள் அதிகம் இருக்கின்றன.
  • வெயில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை பெரிய குறையாக உள்ளது.

இதில் எது பெஸ்ட்?

  • முன்னர் குறிப்பிட்டது போல், இதில் எதுவும் நம்பர் 1 என இல்லை. ஆனால், இதில் ஒரே ஒரு நகரத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றால், பெங்களூரு முதலிடத்தை பெறும்.
  • ஏனென்றால் வேலைவாய்ப்பு, ஐடி, ஸ்டார்ட்அப் சூழல், அதிக சம்பளத்திற்கான வாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை காரணமாக சொல்லலாம்.
  • அதிக சம்பளம் என்றால் மும்பை; செலவு, வாழ்க்கை சமநிலை, வேலை என்றால் ஹைதராபாத்  அல்லது சென்னை; கல்வி, வேலை, குடும்ப வாழ்க்கை என்றால் புனேவை தேர்வு செய்யலாம்.
Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu