4 மணி நேரத்தில் 3,400 முத்தம் கொடுத்த காதலி! காதலுக்கு செக் வைத்த போலீஸ்.. வைரல் வீடியோ
Gwalior Kissing Car: கார் முழுவதும் 3400 லிப்ஸ்டிக் முத்தங்கள் காதலி கொடுத்ததால், போலீசாருக்கு ரூ.5,500 அபராதத்தை காதலன் செலுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Gwalior Bizarre Incident: மத்திய பிரதேசம் குவாலியரில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கார் முழுவதும் 3400 லிப்ஸ்டிக் முத்தங்களை காதலி கொடுத்துள்ளார். இதனால், போலீசார் அபராதம் விதித்துள்ளனர.
3400 லிப்ஸ்டிக் முத்தங்கள்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சமீப நாட்களாக கார் ஒன்று மக்கள் மத்தியில் அதிக பேசப்பட்டு வருகிறது. அந்த காரின் விலை, வேகம் குறித்து இல்லாமல், காரின் தோற்றம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
அதாவது, கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள் உள்ளது. அதாவது, குவாலியரின் தாதிபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகர்வார். இவரின் காரில் தான் 3400 லிப்ஸ்டிக் முத்தங்கள் உள்ளன. அவரது காதலில் வெளிநாடு வீடியோ பார்த்துவிட்டு, இவ்வாறு காதலன் ஆதித்ய சிகர்வார் கார் முழுவதும் லிப்ஸ்டிக் முத்தங்கள் கொடுத்துள்ளார்.
கார் முழுவதும் 4 மணி நேரத்தில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை காதலி கொடுத்துள்ளார். காரின் வெளிப்புறத்தில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் மூலம் ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரூ.5,500 அபராதம்
கார் முழுவதும் லிப்ஸ்டிக் முத்தங்களை கொண்டே காதலன் அந்த காரை ஓட்டி வந்துள்ளார். இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த போலீசார் காரின் எண்ணை ஆய்வு செய்து, காரின் உரிமையாளரை கண்டுபிடித்தனர். போலீசார் அந்த காரை தாதிப்பூர் பகுதியில் கண்டுபிடித்து அபராதம் விதித்தனர்.
காரில் எந்தவொரு பொருளையும் கொண்டு இவ்வளவு விரிவாக பூசுவது மோட்டார் வாகனச் சட்ட விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது என போலீசார் கூறுகின்றனர். இதனால், போலீசார் காரை பறிமுதல் செய்ததோடு, கார் உரிமையாளர்களுக்கு ரூ.5,500 அபராதத்தை போலீசார் விதித்தனர்.
மேலும், காரில் இருந்த 3,400 லிப்ஸ்டிக் கறைகளையும் தண்ணீரில் சுத்தம் செய்ய வைத்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும், சாலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காகவும் போலீசார் அவருக்கு ரூ.5,500 ரொக்க அபராமும் விதித்தனர்.
போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறும், இதுபோன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. காரில் முத்தம் கொடுத்தது குத்தமா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.