SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வங்கிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: 5 நாள் வேலைதான் முக்கிய கோரிக்கை... ஸ்ட்ரைக் தேதிகளை நோட் பண்ணுங்க

Bank Strike: நாட்டின் அனைத்து முக்கிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU), நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் 'வாரத்திற்கு 5 நாட்கள் வேலை' என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முழு அளவிலான போராட்டத்தை அறிவித்துள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 25, 2026, 02:18 PM IST | Updated: Aug 25, 2026, 04:30 PM IST
Join

Bank Strike: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி!! வங்கி தொடர்பான பெரிய பணிகள் அல்லது காசோலை கிளியரன்ஸ் போன்ற முக்கியமான சேவைகள் ஏதேனும் உங்களுக்கும் நிலுவையில் இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

வங்கி யூனியன்களின் போராட்டம்

நாட்டின் அனைத்து முக்கிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU), நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் 'வாரத்திற்கு 5 நாட்கள் வேலை' என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முழு அளவிலான போராட்டத்தை அறிவித்துள்ளது.

நாடு தழுவிய வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை கோருவதற்கான காரணம் என்ன? வேலைநிறுத்தத்திற்கான தேதிகள் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | Explainer: குடும்பத்தை மொத்தமாய் தாக்கும் H1N1 பன்றிக்காய்ச்சல்... 3 நாள் சீரியல் இண்டர்வல் என்றால் என்ன தெரியுமா?

வாரத்திற்கு 5 வேலை நாட்கள்: நீண்ட நாள் கோரிக்கை

வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கும் ஒரு கோரிக்கையாகும்.

ஆகஸ்ட் 23, 2026 தேதியிட்ட UFBU-வின் சுற்றறிக்கையின்படி, "மார்ச் 2024-ல் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் (IBA) சங்கங்களுக்கும் இடையே கையெழுத்தான 12-வது இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், 5 நாட்கள் வங்கிச் செயல்பாட்டை அமல்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணியாற்றவும் ஊழியர்கள் தயாராக இருந்தனர்."

IBA இந்த முன்மொழிவுக்கான பரிந்துரையை நிதியமைச்சகம் / அரசிடம் அனுப்பியிருந்தது. ஆனால் இந்தக் கோப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு தனது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சங்கங்கள் கூறுகின்றன.

செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தால் எழும் சர்ச்சை

மேலும் படிக்க | Old Gold Selling Explained: பழைய தங்கம் விற்பனை - யாருக்கு லாபம்? விளம்பரங்களின் முழுப் பின்னணி

வேலைநிறுத்தத்திற்கான முழுமையான அட்டவணை

UFBU-வில் 'ஆல் இந்தியா பேங்க் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன்' (AIBEA) மற்றும் AIBOC உள்ளிட்ட மொத்தம் 7 முக்கிய சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான தேதிகள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது:

தேதிவிவரம்
11 செப்டம்பர் 2026ஒரு நாள் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்.
28 முதல் 30 செப்டம்பர் 2026 வரைதொடர்ந்து 3 நாட்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்.
26 அக்டோபர் 2026 முதல்கோரிக்கைகளை அரசு அதுவரை ஏற்காத பட்சத்தில், காலவரையற்ற வேலைநிறுத்தம்.

வங்கிச் சேவைகளில் பாதிப்பு

அரசுக்கும் வங்கிச் சங்கங்களுக்கும் இடையே விரைவில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கிச் சேவைகள் (நேரடி வங்கிச் செயல்பாடுகள்) கடுமையாகப் பாதிக்கப்படலாம். டிஜிட்டல் சேவைகள் (UPI, நெட் பேங்கிங் போன்றவை) தொடர்ந்து செயல்பட்டாலும், காசோலை பரிமாற்றம் மற்றும் ரொக்க வைப்பு போன்ற நேரடி வங்கிச் செயல்பாடுகளில் தாக்கம் இருக்கும். ஆகையால், வங்கி வாடிக்கையாளர்கள் வேலைநிறுத்தத் தேதிகளைக் கருத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்வது நல்லது.

மேலும் படிக்க | ஜூலை மாத டிஏ உயர்வு: அறிவிப்பு எப்போது? அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES