நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் அமைதியையும், சர்வதேச சட்டத்தையும் மேம்படுத்த அவரது முயற்சிகளை பாராட்டி நோபல் பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் அமைதியையும், சர்வதேச சட்டத்தையும் மேம்படுத்த அவரது முயற்சிகளை பாராட்டி நோபல் பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது.
இதன்மூலம், நோபல் பரிசை வென்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார். 1890 காலகட்டத்தில் கரும்பு வெட்டும் கூலியாக இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வழித்தோன்றல்தான் நவநீதம் பிள்ளை ஆவார்.
நவநீதம் பிள்ளை வகித்த பதவி
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில், நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் இந்திய வம்சாவளித் தமிழ் குடும்பத்தில் பிறந்த இவர், கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வழக்கறிஞரானார். இவர் நெல்சன் மண்டேலா போன்ற நிறவெறி எதிர்ப்புப் போராளிகளுக்காக வாதாடியவர், பின்னர் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் முதல் வெள்ளையர் அல்லாத பெண் நீதிபதியாக பதவி ஏற்றவர்.
சர்வதேச அரங்கில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதில் இவர் பெரும் பங்காற்றி உள்ளார். ருவாண்டா சர்வதச குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் படிக்க | சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்: 3 பேர் பலி... இந்தியா கடும் கண்டனம்
சர்வதேச அளவிலான செயல்பாடு
ருவாண்டா விசாரணையின் போது, பாலியல் வன்கொடுமையை ஒரு போர்க்குற்றமாகவும், இனப்படுகொலை நடவடிக்கையாகவும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது மியான்மர் மீதான இனப்படுகொலை வழக்கினை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்ட நவி பிள்ளை, வெறும் பிரச்சாரங்கள் மூலம் வெறுப்பைத் தூண்டுவதும் இனப்படுகொலை குற்றமே என வரலாற்றுத் தீர்ப்பளித்தவர்.
உலகெங்கும் சட்டத்தின் மாண்பு சவால்களைச் சந்திக்கும் இக்காலகட்டத்தில் அதிகாரத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகவும் சர்வதேச நீதியின் அடையாளமாகவும் விளங்குவதற்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு... இவர்களின் கண்டுபிடிப்பு என்ன?