SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஸ்பெயின் ரயில் விபத்து..பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு! உதவி எண்களை அறிவித்த இந்தியா..

ஸ்பெயினில் இரு அதிவேக பணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 60க்கும் மேற்பட்டாேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, உதவி எண்களையும் அறிவித்திருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.

Written By Yuvashree M
Published: Oct 29, 2026, 08:13 AM IST | Updated: Oct 29, 2026, 08:19 AM IST
Join

ஐரோப்ப நாடான ஸ்பெயினில், பயணிகள் ரயில் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உலக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்தும், இதில் உயிரிழந்தவர்கள் குறித்தும் இங்கு முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து!

ஐரோப்ப நாடான ஸ்பெயினில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்டில் இருந்து செவில்லே நாகரங்களுக்கு இடையே ரயில் சேவை நடைப்பெற்று வருகிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே ஒரே தண்டவாளத்தில் நேற்று இரு அதிவேக பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து, டோலிடோ மாகாணத்தின் உர்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 68 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பெண்கள் டார்க்கெட்.. 38 பேரை கொன்று சமைத்து திண்ற சீரியல் கில்லர்.. 15 வருட கொடூரம்

இந்தியா உதவி எண்கள் அறிவிப்பு!

ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்திருக்கிறது. இதன்படி, விபத்துக்குள்ளான ரயில்களில் பயணித்த இந்தியர்களின் விவரங்கள் அறிய முடியும் என இந்திய தூதரகம் குறிப்பிட்டிருக்கிறது. இதன் மூலம் தேவையான உதவியையும், விபத்து தொடர்பான விவரங்களையும் தெரிந்து கொள்ள, +34 650 339 008 எனும் எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், cons.madrid@mea.gov.in எனும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம். அதே போல, Renfe : 900 10 10 20 மற்றும் Iryo : 900 001 403 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்ற்று ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறார்.

எப்படி நடந்தது? ஏன் நடந்தது?

இந்த விபத்து குறித்து விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், இதில் முதற்கட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, Iryo அதிவேக ரயில், சுமார் 147 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது LZB ரயில் மேலாண்மையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்க் நேர் எதிரே 397 பயணிகளுடன் வந்த அதிவேக பயணிகள் ரயிலை பாதுகாப்பு மேலாண்மை அனுமதித்திருக்கிறது. சிகப்பு சிக்னல் காண்பித்திருந்த போதும் அந்த ரயிலை, வரம்புக்கு மீறிய வேகத்துடன் செல்ல அனுமதித்ததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மோதலின் வேகத்தால் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதனால், உலோகத் துண்டுகளும் சிதைவுகளும் ஒரு பக்கத்தின் கீழே சரிந்து விழுந்து, பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து ஸ்பெயின் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் Oscar Puente பேசுகையில், இந்த பேரிழப்பானது கணினி அமைப்பு செயலிழப்பு மற்றும் மனித/கட்டுப்பாட்டு மையப் பிழை ஆகியவற்றின் விளைவால் ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரயில்கள் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த போதும், கட்டுப்பாட்டு மையம்தான் இரண்டாவது ரயிலை சிகப்பு சிக்னலின் போது முன்னே செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னரும், கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி மாட்ரிட் நகரில் இருந்து Seville எனும் இடத்திற்கு சென்ற அதிவேக ரயில் விபத்துக்குள்ளானது. இதில், 46 பேர் உயிரிழந்ததுடன், 292 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES