• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /அமெரிக்காவின் அழுத்தம்... ரஷ்யா உடனான வர்த்தகத்திற்கு நெருக்கடியா? - இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்காவின் அழுத்தம்... ரஷ்யா உடனான வர்த்தகத்திற்கு நெருக்கடியா? - இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

India On US Russia Sanctions : ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா மசோதா நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 12:46 PM IST|Updated: Sep 17, 2026, 12:57 PM IST
joinshare
அமெரிக்காவின் அழுத்தம்... ரஷ்யா உடனான வர்த்தகத்திற்கு நெருக்கடியா? - இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
Image Credit: US Russia Sanctions | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

India On US Russia Sanctions : ரஷ்யா உடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரைக் காரணம் காட்டி ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டுடன் வணிக உறழு வைத்துள்ள மூன்றாம் தர நாடுகள் மீது கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இதற்கு சர்வதேச நாடுகளின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | Explained | 2026 பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு எதைச் சாதித்தது மற்றும் எஞ்சியுள்ள சவால்கள் என்ன?

இந்தியா அளித்த விளக்கம் என்ன...?

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட மசோதாவின் உள்ளடக்கங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

எந்தவொரு வெளிநாட்டு சட்டமும் அல்லது தடை உத்தரவும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தக கட்டமைப்பை எளிதில் பாதிவிட முடியாது" என்றார். மேலும் அவர், "தேசிய நலன், நாட்டின் எரிசக்தித் தேவை மற்றும் வர்த்தக நலன்களை பாதுகாப்பதே மத்திய அரசின் பிரதான கடமையாகும்.

Our statement on passage of the Sanctioning Russia and Iran Act in the US Congress

🔗 https://t.co/kD0Yg9sWbU pic.twitter.com/rSc21AqwEh

— Randhir Jaiswal (@MEAIndia) September 17, 2026

சர்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் எடுக்கப்படும் முடிவுகளில் அரசு எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தர்

ரஷ்யா - உக்ரைன் மோதல் தீவிரமடைந்த காலகட்டத்தில் இருந்தே, மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் கடுமையாக இருந்தது. அதற்கு மத்தியிலும் இந்தியா குறைந்த விலையில் ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. தற்போதும் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா இருந்து வருகிறது.

மேலும் படிக்க | BRICS 40%, G7 29%: தரவுகளை புட்டுபுட்டு வைத்த ரஷ்ய அதிபர்... அமெரிக்காவை சாடி அதிரடி பேச்சு | Explainer

இந்தியாவுக்கு சவால்கள் ஏற்படலாம்

கச்சா எண்ணெய் மட்டுமின்றி பாதுகாப்பு உபகரணங்கள், உரங்கள் ஆகியவற்றின் விநியோகத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகால நம்பகமான வர்த்தக பார்ட்னர்ஷிப் நிலவி வருகிறது. இதனால் ரஷ்யா மீதான புதிய தடைகளை இந்தியாவுக்கு நேரடி சவால்களை உருவாக்கலாம் என்ற பேச்சுகள் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் தொடரும்

ரஷ்யா உடன் வர்த்தக ரீதியிலான உறவை தொடரும் இந்தியா, அதேநேரத்தில் அமெரிக்காவுன் நல்லுறவையே பராமரித்து வருகிறது. அமெரிக்கா இந்திய நாட்டின் மிக முக்கியமான உத்திசார் மற்றும் வர்த்தக கூட்டாளியாக நீடிப்பதை வெளியுறவுத்துறையும் தற்போது சுட்டிக்காட்டியிருக்கிறது.

இத்தகைய ஒருதரப்பின் பொருளாதார தடைகள், இருதரப்பு நல்லுறவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், அமெரிக்க அதிகாரிகளுடன் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டது.

இந்தியாவில் சமானிய மக்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையிலும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அனைத்து சர்வதேச நட்புறவு நாடுகளுடனும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவோம் என மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | பலூசிஸ்தானில் BLA அதிரடி தாக்குதல்: 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்

Add Zee News as a Preferred Source
TAGS:
Russia