வருகிறது iPhone 18 Pro... இந்தியாவில் எவ்வளவு? எந்த நாட்டில் விலை கம்மி...?
iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Duo ஆகிய ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. இவற்றில் பல்வேறு வேரியண்ட்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் எவ்வளவு விலையில் விற்பனையாகும் என்பதை இங்கு காணலாம்.
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Price, Country-wise: ஆப்பிள் நிறுவனம் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உள்ளிட்ட புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை நேற்று (செப். 9) அறிமுகப்படுத்தி உள்ளது. iPhone Duo என்பது Foldable ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்த உள்ளது.
iPhone Duo என்பது மடக்கி கொள்ளும் வகையிலான ஸ்மார்ட்போன் மாடலாகும். வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் இந்த மாடல்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் வேரியண்ட்கள் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் எவ்வளவு விலை என்பதை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | தாறுமாறாக உயர்ந்த பழைய iPhone-களின் விலை! எல்லாத்துக்கும் iPhone 18தான் காரணம்..
இந்தியாவில் விலை எவ்வளவு?
256GB வேரியண்ட்: இந்தியாவில் iPhone 18 Pro 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 1 லட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. iPhone 18 Pro Max 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
512GB வேரியண்ட்: iPhone 18 Pro 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 1 லட்சத்து 89 ஆயிரத்து 900 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. iPhone 18 Pro Max 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 2 லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1TB, 2TB வேரியண்ட்: iPhone 18 Pro 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 2 லட்சத்து 39 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே Pro Max வேரியண்ட் 2 லட்சத்து 54 ஆயிரத்து 900 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2TB iPhone 18 Pro 3 லட்சத்து 14 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் iPhone Duo ஸ்மார்ட்போன் 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 ரூபாய் விலையாகும்.
மற்ற நாடுகளில் விலை எவ்வளவு...?
iPhone 18 Pro (Basic Variant)
- அமெரிக்காவில் இதன் விலை ரூ.1.14 லட்சம் ஆகும்.
- ஜெர்மனியில் இதன் விலை ரூ.1.61 லட்சம் ஆகும்.
- இங்கிலாந்தில் இதன் விலை ரூ.1.54 லட்சம் ஆகும்.
- சீனாவில் இதன் விலை ரூ.1.42 லட்சம் ஆகும்.
- ஜப்பானில் இதன் விலை ரூ.1.37 லட்சம் ஆகும்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.1.32 லட்சம்.
iPhone 18 Pro Max (Basic Variant)
- அமெரிக்காவில் இதன் விலை ரூ.1.24 லட்சம் ஆகும்.
- ஜெர்மனியில் இதன் விலை ரூ.1.77 லட்சம் ஆகும்.
- இங்கிலாந்தில் இதன் விலை ரூ.1.67 லட்சம் ஆகும்.
- சீனாவில் இதன் விலை ரூ.1.56 லட்சம் ஆகும்.
- ஜப்பானில் இதன் விலை ரூ.1.49 லட்சம் ஆகும்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.1.42 லட்சம் ஆகும்.
iPhone Duo
- அமெரிக்காவில் இதன் விலை ரூ.1.90 லட்சம் ஆகும்.
- ஜெர்மனியில் இதன் விலை ரூ.2.55 லட்சம் ஆகும்.
- இங்கிலாந்தில் இதன் விலை ரூ.2.57 லட்சம் ஆகும்.
- சீனாவில் இதன் விலை ரூ.2.27 லட்சம் ஆகும்.
- ஜப்பானில் இதன் விலை ரூ.2.27 லட்சம் ஆகும்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.2.20 லட்சம் ஆகும்.
எந்த நாட்டில் குறைந்த விலை...?
iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Duo ஆகியவை அமெரிக்காவில்தான் குறைந்த விலையில் விற்பனையாகி வருகிறது.