Tamil News LIVE : நானா படேகர் மறைவு, சிஜேபி போராட்டம், தமிழ்நாட்டில் கனமழை, முக்கிய அப்டேட்ஸ்
Tamil News LIVE Updates : தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு முக்கிய சம்பவங்கள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. அவை குறித்த முக்கிய தகவல்களை இங்கு லைவ் அப்டேட்ஸாக தெரிந்து கொள்வோம்.
Tamil News LIVE Updates : தமிழகத்தில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நானா படேகர் 75 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக்கோரி, சிஜேபி இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறது. மேலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள், லைவ் அப்டேட்ஸாக உங்கள் முன்..
08 Oct 2026, 11:03 AM
தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 321 காலியிடங்கள்
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. NICL AO முதன்மைத் தேர்வு (Prelims) 17 நவம்பர் 2026 அன்றும், முதன்மைத் தேர்வு (Mains) 22 டிசம்பர் 2026 அன்றும் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் NICL AO ஆட்சேர்ப்பு 2026 குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.... (மேலும் படிக்க)
08 Oct 2026, 10:31 AM
நானா படேகர் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்!
”அன்புக்குரிய நானா படேகர் இனி நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை; நானா படேகர் குடும்பத்தினருக்கும் அவருடைய அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று காலா படத்தில் நானா படேகருடன் சேர்ந்து நடித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
08 Oct 2026, 10:01 AM
முதல்வர் விஜய்யை விமர்சித்த கனிமொழி!
முதல்வர் விஜய் குறித்து சமீபத்திய கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனிமொழி, பெண்களை விமர்சித்தும், அவர்கள் உடை பற்றி இழிவாக பல படங்களில் பேசிய ஒருவர்தான் இன்று முதல்வராக இருக்கிறார் என்று விமர்சித்து இருக்கிறார்.
08 Oct 2026, 9:59 AM
மக்களுக்கு எதிரான குற்றம்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான 'ஸ்டார்லிங்க்' (Starlink) அறிமுகம் செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஒரு தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்... (மேலும் படிக்க)
08 Oct 2026, 9:30 AM
தமிழகத்தில் மழை அலர்ட்!
வங்கக்கடலில் கிழக்குத் திசைக் காற்றானது (Easterlies) தீவிரமடைந்து வரும் நிலையில், தென் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய இடங்களில் இடி மின்னல் தீவிரமடையக்கூடும்; அதேபோல, இலங்கைத் தீவுப் பகுதிகள் இப்போதிலிருந்து கிழக்குத் திசைக் காற்றின் தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்குகின்றன
08 Oct 2026, 9:29 AM
காங்.எம்எல்ஏ விளக்கம்!
ரங்கா ரெட்டி என்கிற 70 வயது எம்.எல்.ஏ, பேருந்தில் பயணித்த பெண்களிடம் பேசுகையில் அவர்களை தவறாக தொட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவர் விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)
08 Oct 2026, 9:28 AM
நானா படேகர் மறைவு!
பிரபல இந்திய நடிகரான நானா படேகர், தன்னுடைய 75வது வயதில் உயிரிழந்தார்; இவர், கோவாவில் உள்ள அவர் வீட்டில் இருந்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.