• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

அபிஷேக் சர்மா சன் ரைசர்ஸ் அணியில் அதிருப்தியில் இருப்பதாகவும், டிரேடிங் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Written ByR Balaji
Published: Oct 08, 2026, 11:12 AM IST|Updated: Oct 08, 2026, 11:15 AM IST
joinshare
SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வைதிருதி யோகம்: அக்., 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சோதனை காலம்.. பணம், வேலையில் உஷார்!

வைதிருதி யோகம்: அக்., 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சோதனை காலம்.. பணம், வேலையில் உஷார்!

2

சவுதி தலைநகர் ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல்! அமெரிக்காவின் புதிய முன்மொழிவை நிராகரித்த ஈரான்

3

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்தால்தான் பதவி உயர்வு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

4

Explained : இன்ஸ்டா பிரபலத்தின் விபரீத முடிவு..முத்துக்குமரன் காரணமா? நடந்தது என்ன?

5

SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முக்கியமான மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணியின் தற்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காரணமாக அடுத்த சீசனில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு மாற்றாக புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய சூழல் சன் ரைசர்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சன் ரைசர்ஸ் நிர்வாகம் இஷான் கிஷனை அடுத்த கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தற்போது அணியின் துணை கேப்டனாக இருக்கும் அபிஷேக் சர்மாவை தொடர்ந்து அதே பொறுப்பில் வைத்திருக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதான் அபிஷேக் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அணியின் துணை கேப்டனாக இருக்கும் நிலையில், தனக்கு கேப்டன் வாய்ப்பு வழங்காமல் இஷான் கிஷனை அந்த பதவிக்கு தேர்வு செய்வது ஏன் என அபிஷேக் தரப்பு சன் ரைசர்ஸ் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு நிர்வாகத்திடம் இருந்து அவருக்கு திருப்திகரமான விளக்கம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து, சன் ரைசர்ஸ் அணியில் இருந்து டிரேடிங் மூலம் வெளியேற அபிஷேக் சர்மா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுடன் அவரது தரப்பு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி அபிஷேக் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்குவதில் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூவராஜ் சிங்கின் திட்டம் என்ன?

இதற்கிடையே, அபிஷேக் சர்மாவின் ஆலோசகராக செயல்பட்டு வரும் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், இந்த விவகாரத்தில் பொறுமையாக இருக்கும்படி அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. யுவராஜ் சிங்கை டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அபிஷேக் சர்மாவையும் டெல்லி அணிக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்தில் யுவராஜ் இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் அபிஷேக் சர்மா இணைந்தால், கே.எல். ராகுலுடன் இணைந்து அவர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணி சிறப்பாக அமைந்தால், நீண்ட காலத்துக்கு தேவையான ஓபனிங் கூட்டணி டெல்லி அணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணியின் எதிர்கால கேப்டன்சி திட்டத்துக்கும் அபிஷேக் சர்மா முக்கியமான வீரராக இருக்கலாம் என கூறப்படுகிறது. யுவராஜ் சிங்கின் ஆலோசனையை அபிஷேக் சர்மா ஏற்றுக்கொள்வார் என்பதால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அவர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

சன் ரைசர்ஸ் கேட்கும் வீரர்கள் யார்?

ஆனால், அபிஷேக் சர்மாவை டிரேடிங் மூலம் பெறுவதற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அதற்கு இணையான முக்கிய வீரர்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். சன் ரைசர்ஸ் அணிக்கு தற்போது வலுவான இந்திய சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், டெல்லி அணியில் இருக்கும் அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவரை டிரேடிங் ஒப்பந்தத்தில் சேர்க்க சன் ரைசர்ஸ் முயற்சி செய்யலாம்.

அதேபோல், அணியின் டாப் ஆர்டரை வலுப்படுத்த கே.எல். ராகுலையும் சன் ரைசர்ஸ் நிர்வாகம் கேட்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அபிஷேக் சர்மாவை மையமாக வைத்து நடைபெறும் டிரேடிங் பேச்சுவார்த்தை எளிதாக முடியாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் சர்மாவுக்கு நோ சொன்ன பஞ்சாப் கிங்ஸ்

இதற்கிடையே அபிஷேக் சர்மா முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த அணியில் பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஓபனிங் இடத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், தற்போதைய கூட்டணியை மாற்ற பஞ்சாப் நிர்வாகம் விரும்பவில்லை என தெரிகிறது.

குறிப்பாக, புதிய வீரரை அணிக்குள் கொண்டு வருவதற்காக ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் தொடக்க வீரர்களில் ஒருவரை நீக்க வேண்டாம் என்ற முடிவை பஞ்சாப் கிங்ஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அபிஷேக் சர்மாவின் அடுத்த ஐபிஎல் அணி எது என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. சன் ரைசர்ஸ் அணியில் நீடிப்பாரா, மும்பை இந்தியன்ஸ் அல்லது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு செல்வாரா என்பது டிரேடிங் பேச்சுவார்த்தையின் முடிவில்தான் தெரியவரும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL