• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

ரங்கா ரெட்டி என்கிற 70 வயது எம்.எல்.ஏ, பேருந்தில் பயணித்த பெண்களிடம் பேசுகையில் அவர்களை தவறாக தொட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவர் விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Written ByYuvashree M
Published: Oct 08, 2026, 06:28 AM IST|Updated: Oct 08, 2026, 06:41 AM IST
joinshare
“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!
Image Credit: malreddy rangareddy | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

“தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

2

இன்றைய ராசிபலன் அக்.8 : சிலருக்கு ஏற்றம்...சிலருக்கு மாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

3

4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

4

இனி வாஷிங்டன் சுந்தருக்கு ஆப்பு... இடத்தை கப்புனு பிடித்த நமன் திர்

5

இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தெலங்கானாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், மல்ரெட்டி ரங்காரெட்டி அரசு பேருந்தில் பயணித்த மாணவி ஒருவரை அனுமதியின்றி தொட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வீடியோவாகவும் வைரலாவதால் இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

நடந்தது என்ன?

70 வயதாகும் சட்டமன்ற உறுப்பினர் ரங்கா ரெட்டி, இப்ரஹிம் பட்னம் எனும் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தெலங்கனாவில், சமீபத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசாங்கத்தால் ‘மகாலட்சுமி மகளிர் இலவச பயணத்திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக, கட்டணமின்றி அரசு பேருந்தில் பயணித்த 2 மாணவிகளுடன் ரங்காரெட்டி உரையாடுவது போன்ற காணொலிதான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

அந்த வீடியோவில், ரங்காரெட்டி ஒரு மாணவின் கையை பிடித்துக்கொண்டு உரையாடுகிறார். அந்த மாணவி, தான் கடந்த ஆண்டு முழுவதும் மாநிலத்தின் அரசு பேருந்தில் பயணிப்பதாகவும், இதனால் தன்னால் ரூ.45000 வரை ஒரு வருடத்தில் சேர்க்க முடிந்தது என்றும் தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க | 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்கள் - டெல்லியில் மீண்டும் ஷாக்

எதிர்கட்சி கண்டனம்..!

இந்த காணொலியை பார்த்த பாரத ராஷ்டிர சம்ரிதி கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.பிரவீன் குமார், ஒரு நலத்திட்டம் குறித்து பேசும் போது, அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டுதான் பேச வேண்டுமா? என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.

மேலும், "இது குற்றம் இல்லையா? இது ஒரு பெண்ணின் மானபங்கத்திற்கு விரோதமானது இல்லையா?" என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில்  பேசுகையில் கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து, தெலங்கானாவின் மாநில மகளிர் ஆணையம் வரவழைத்து, சட்டரீதியாக இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்று கூறியிருக்கிறார். பெண்கள் பாதுகாப்பு டிஜிபிஐ ட்விட்டரில் டேக் செய்து ஒரு பதிவை பிஆர்எஸ் கட்சி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது. அதில், ”இங்கு பெண் மற்றும் மனித சேவைகள் குழுக்கள் எங்கே? ஆர்.டி.சி நடத்துனரிடம் புகார் பெற்று, இந்திய தண்டனைச் சட்டம் 354-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யுங்கள். பாஜகவும் காங்கிரஸும் பெண்களை அவமதிப்பதில் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்மயி கண்டனம்!

பாடகி சின்மயியும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பதிவை வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியின் ஆண் அரசியல் தலைவர்களின் கைகள், பெண்களை தொடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், சாதாரணப் பேச்சுக்கு அவன் அவளைத் திரும்பத் திரும்பத் தொட வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு எவ்வளவு வயதானாலும் சரி - அவள் சற்றும் சங்கடமாக உணர்கிறாள், மேலும் இந்த மனிதனுக்குச் சம்மதம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அந்த இடுக்கமான இடத்தில் அவள் விலகிச் செல்ல முயலும்போது, ​​அவன் மீண்டும் மீண்டும் கையை நீட்டி அவளது இடுப்பின் மேற்பகுதியைத் தடவுகிறார் என்று குறிப்பிட்டு, அந்த வீடியோவையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

எம்.எல்.ஏ சொன்னது என்ன?

ரங்கா ரெட்டி, இது குறித்து பேசுகையில், தான் மாணவிகளிடம் ஒரு தந்தையின் பாசத்தோடு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் பற்றி பேசி வந்ததாகவும், அதை எதிர்கட்சி திரித்து கூறுவதாகவும் பேசியிருக்கிறார். இது குறித்து வெளியாகியிருக்கும் வீடியோவில் அவர் பேசும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அதில், அக்டோபர் 6ஆம் தேதி, தான் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பிறகு போங்களூரு புறநகர் பகுதியில் பேருந்தில் ஏறியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Malreddy Ranga Reddy (@malreddy_rangareddy)

அந்த பேருந்தில், பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வரும் மகளிரிடம் உரையாடியதாகவும், அதில் பயணித்த மாணவிகள், அதிக பயணிகள் ஏறுவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்னும் நிறைய பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

பேருந்தில் எடுக்கப்பட்ட காணொளியை, பி.ஆர்.எஸ் சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிப்பதாக தெரிவித்த அவர், பெண்கள் மீதான தனது மரியாதையை அந்த காணொளியில் வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க | மாணவியிடம் அத்துமீறிய காங்கிரஸ் எம்எல்ஏ... பேருந்தில் நடந்தது என்ன? ஷாக் வீடியோ

Add Zee News as a Preferred Source
TAGS:
India