• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: நேபாளம் வெள்ளப்பெருக்கு பாதிப்பு; சட்டப்பேரவை கூட்டம் - அப்டேட்ஸ்
Live Now

Tamil News LIVE: நேபாளம் வெள்ளப்பெருக்கு பாதிப்பு; சட்டப்பேரவை கூட்டம் - அப்டேட்ஸ்

Tamil News LIVE Updates: நேபாள வெள்ளப்பெருக்கு பாதிப்பு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸை இங்கு உடனுக்குடன் காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 27, 2026, 09:28 IST|Updated: Aug 27, 2026, 15:21 IST
joinshare
Tamil News LIVE: நேபாளம் வெள்ளப்பெருக்கு பாதிப்பு; சட்டப்பேரவை கூட்டம் - அப்டேட்ஸ்
Image Credit: TN Assembly, Nepal Floods | Image Source : X
27 Aug 2026 14:44 IST
share

புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

ரேஷன் கடை ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது! ஊதிய உயர்வுடன் சேர்த்து மக்களுக்கான ரேஷன் பொருட்களின் அளவும் அதிகரிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. (மேலும் படிக்க)

27 Aug 2026 14:14 IST

80 பேரின் நிலை என்ன?

ஈஷா மூலம், நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 80 பேர் சென்றதாகவும், அவருடைய நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் சத்குரு பேசியிருக்கிறார். (மேலும் படிக்க)

27 Aug 2026 14:04 IST

Tamil News Live : சமூக நீதித்துறை பெயர் மாற்றம் ஏன்?

சமூக நீதித்துறை என மாற்றிவிட்டோம் என சொல்கிறார்கள். இந்த அரசு சாதி என்ற வார்த்தையை ஒழிக்க நினைக்கிறது. அதனால்தான் பெயரை மாற்றினோம். வேறு எதுவும் கிடையாது. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் பட்டியலின பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

27 Aug 2026 13:45 IST

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான மாநில அரசின் முயற்சிகள் குறித்து, வியாழக்கிழமையன்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன... (மேலும் படிக்க)

27 Aug 2026 12:23 IST

Nepal Floods Live : அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

  • குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற மேலும் 49 தமிழர்கள் மாயமாகி உள்ளனர்.
  • நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
  • தகவல் தொடர்பு துண்டிப்பு - மாயமானோர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.  
  • கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்பு.
  • கும்பகோணத்தில் இருந்த சென்ற 36 பேர் மாயம். மாயமானோர் குறித்து அரசு சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
27 Aug 2026 12:13 IST

India Post GDS Recruitment 2026

இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை (India Post), 20 ஆகஸ்ட் 2026 தேதியிட்ட அறிவிப்பு எண் 17-12/2026-GDS-இன் வாயிலாக, 'கிராமின் டாக் சேவக்' (GDS) பணிக்கான 'ஆன்லைன் பணி நியமன அட்டவணை-II (ஜூலை-2026)' குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)

27 Aug 2026 12:05 IST

நேபாளத்தில் வெள்ளம்: பனிப்பாறை ஏரி உடைப்பா? இந்தியாவுக்கு எச்சரிக்கை

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் வீடுகள், பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமா என்ற விசாரணை தீவிரம். இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்படலாம் என்பதால் பீகாரின் பல மாவட்டங்களில் எச்சரிக்கை. (மேலும் படிக்க)

27 Aug 2026 10:15 IST

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழுவை அமைப்பது மற்றும் புதிய ஊதிய விகித அட்டவணை (pay matrix) குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது... (மேலும் படிக்க)

27 Aug 2026 10:37 IST

Tamil Nadu Assembly Live : பன்றிக்காய்ச்சல் பரவல் - கேள்வி vs பதில்

திமுக எம்எல்ஏ லட்சுமணன் கேள்வி: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது...?

அமைச்சர் அருண்ராஜ் பதில்: பன்றிக் காய்ச்சல் பரவல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மே மாதத்திற்கு முன்பு குறைவாக இருந்த காய்ச்சல் தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சற்று அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

27 Aug 2026 09:50 IST

Nepal Floods Live : நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன?

  • நேபாளத்தில் நேற்று பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் காணவில்லை. 2ஆம் நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
  • நேபாளத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் சுற்றுலா சென்றனர். அதில் 20 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 37 பேர் எங்கு இருக்கிறார்கள்...?, அவர்களின் நிலை என்ன...? என இதுவரை தெரியவில்லை.
  • வெள்ளம் தாக்கியபோது இந்த குழுவினர் இமயமலையில் ஒரு கோவிலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
  • கோவை ஈஷா அறக்கட்டளை, நேபாளத்தில் உள்ள குடிவரவு மையத்தில் இருந்த 77 உறுப்பினர்களை காணவில்லை என்று தனியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
  • அதேநேரத்தில் 495 பேர் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்தார். குடிவரவு மையத்தின் எந்த ஊழியர்களுடனும் தொடர்பு இல்லை என்று நேபாள அரசு தெரிவித்தது.

 

27 Aug 2026 09:43 IST

Tamil News Live : 'தலைமை செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்'

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை கணக்கிடுவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டாசிரியர் ஒருவர் சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடிதம் எழுதி உள்ளார். அதில், "தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றறிக்கை விவகாரத்தில் இதுவரை அரசுத் தரப்பில் இருந்து பொறுப்பான பதில் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

2

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

3

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

4

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

5

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நேபாள வெள்ளப்பெருக்கு: திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் நேற்று ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெருவெள்ளத்தில் சிக்கிய 963 பேரின் நிலை என்ன என்பதே தெரியவில்லை. அவர்களை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை அப்டேட்ஸ்: தமிழ்நாடு பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் - சமூகநீதித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெறுகிறது.

IND vs SL : கொழும்புவில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி 5வது நாள் ஆட்டமாகும். இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையில் உள்ளது.