புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!
ரேஷன் கடை ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது! ஊதிய உயர்வுடன் சேர்த்து மக்களுக்கான ரேஷன் பொருட்களின் அளவும் அதிகரிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. (மேலும் படிக்க)
நேபாள வெள்ளப்பெருக்கு: திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் நேற்று ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெருவெள்ளத்தில் சிக்கிய 963 பேரின் நிலை என்ன என்பதே தெரியவில்லை. அவர்களை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை அப்டேட்ஸ்: தமிழ்நாடு பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் - சமூகநீதித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெறுகிறது.
IND vs SL : கொழும்புவில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி 5வது நாள் ஆட்டமாகும். இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையில் உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது! ஊதிய உயர்வுடன் சேர்த்து மக்களுக்கான ரேஷன் பொருட்களின் அளவும் அதிகரிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. (மேலும் படிக்க)
ஈஷா மூலம், நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 80 பேர் சென்றதாகவும், அவருடைய நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் சத்குரு பேசியிருக்கிறார். (மேலும் படிக்க)
சமூக நீதித்துறை என மாற்றிவிட்டோம் என சொல்கிறார்கள். இந்த அரசு சாதி என்ற வார்த்தையை ஒழிக்க நினைக்கிறது. அதனால்தான் பெயரை மாற்றினோம். வேறு எதுவும் கிடையாது. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் பட்டியலின பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான மாநில அரசின் முயற்சிகள் குறித்து, வியாழக்கிழமையன்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன... (மேலும் படிக்க)
இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை (India Post), 20 ஆகஸ்ட் 2026 தேதியிட்ட அறிவிப்பு எண் 17-12/2026-GDS-இன் வாயிலாக, 'கிராமின் டாக் சேவக்' (GDS) பணிக்கான 'ஆன்லைன் பணி நியமன அட்டவணை-II (ஜூலை-2026)' குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் வீடுகள், பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமா என்ற விசாரணை தீவிரம். இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்படலாம் என்பதால் பீகாரின் பல மாவட்டங்களில் எச்சரிக்கை. (மேலும் படிக்க)
8வது ஊதியக் குழுவை அமைப்பது மற்றும் புதிய ஊதிய விகித அட்டவணை (pay matrix) குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது... (மேலும் படிக்க)
திமுக எம்எல்ஏ லட்சுமணன் கேள்வி: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது...?
அமைச்சர் அருண்ராஜ் பதில்: பன்றிக் காய்ச்சல் பரவல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மே மாதத்திற்கு முன்பு குறைவாக இருந்த காய்ச்சல் தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சற்று அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை கணக்கிடுவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டாசிரியர் ஒருவர் சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடிதம் எழுதி உள்ளார். அதில், "தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றறிக்கை விவகாரத்தில் இதுவரை அரசுத் தரப்பில் இருந்து பொறுப்பான பதில் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.