)
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரில் ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.
𝗚𝗢𝗟𝗗 𝗠𝗘𝗗𝗔𝗟𝗟𝗜𝗦𝗧𝗦 𝗔𝗚𝗔𝗜𝗡 🥇
Congratulations #TeamIndia for successfully defending the Asian Games Gold Medal 👏👏
Scorecard ▶️ https://t.co/g4wzZagyGj#AsianGames pic.twitter.com/sg7z4dhUzH— BCCI (@BCCI) October 3, 2026
நடப்பு தொடரில் இந்தியா வெல்லும் 19வது தங்கம் ஆகும். 26 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்கள் இதுவாகும்.
திண்டுக்கல் இளைஞர் நீதிக் குழுமத்தில் பணிபுரிந்திட கீழ்க்கண்ட 2 பதவிகளுக்கு ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன... (மேலும் படிக்க)
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் அக். 5, 6 விடுமுறை (மேலும் படிக்க)
தமிழ்நாட்டில் 90 அணைகளின் மொத்த நீர் இருப்பு 34% ஆக குறைந்தது. El Nino தாக்கம், வெயில் அதிகரிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த விரிவான பார்வை இதோ (மேலும் படிக்க)
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் நாளுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களது சம்பளம், அலவன்சுகள் மற்றும் ஓய்வூதியத்தில் பெரிய ஏற்றம் கிடைப்பதோடு ஜனவரி 2026 முதல் பிதிய ஊதியக் குழுவின் நன்மைகளுக்கான அரியர் தொகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது... (மேலும் படிக்க)
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில், புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) சிக்கி மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... (மேலும் படிக்க)
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அக்டோபர் 3,5ஆம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (மேலும் படிக்க)
மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்தடை போன்ற புகார்களை எளிதாக அளிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
தமிழகத்தில் 100 சார் பதிவாளர் அலுவலகங்களி இனி சனிக்கிழமை செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
முக்கிய அரசியல் பேரணிகள் நடைபெறும் இடமான சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' தலைவர் அபிஜீத் திப்கே, ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் "ஜந்தர் மந்தர் 2.0" போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தார்... (மேலும் படிக்க)
சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து மண்டலங்களிலும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. 109 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நிலவேம்பு கசாயமும் வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டு தனி நபர் மகளிர் ரிகர்வ் வில் வித்தை போட்டியில் இந்தியாவின் குங்கும் மொஹோத் (17) தங்கம் வென்று சாதனை. தனிநபர் ரிகர்வ் இறுதிப்போட்டியில் கொரியாவின் ஓ யேஜினை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் மொஹோத்.
இடைத்தேர்தல் அப்டேட்ஸ்: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை நாளை மறுநாளுடன் (அக். 5) நிறைவடையும். எனவே, இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் கட்சிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். மதுராந்தகத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
ஆசிய விளையாட்டு தொடர்: ஆசிய விளையாட்டு போட்டித்தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஆடவர் கிரிக்கெட் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.