• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /தாய்மாமன் திட்டம் துவக்கம்.. 1 கிராம் மோதிரத்தை அணிவித்த விஜய்.. குழந்தை கொடுத்த ரியாக்ஷன்!

தாய்மாமன் திட்டம் துவக்கம்.. 1 கிராம் மோதிரத்தை அணிவித்த விஜய்.. குழந்தை கொடுத்த ரியாக்ஷன்!

Thaimaman Thanga Mothiram Thittam: மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். குழந்தைக்கு மோதிரம் அணிவிக்கும்போது, அந்த குழந்தை விஜய்யை பார்த்த சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written ByUmabarkavi K
Published: Sep 28, 2026, 01:59 PM IST|Updated: Sep 28, 2026, 05:03 PM IST
joinshare
தாய்மாமன் திட்டம் துவக்கம்.. 1 கிராம் மோதிரத்தை அணிவித்த விஜய்.. குழந்தை கொடுத்த ரியாக்ஷன்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thaimaman Thanga Mothiram Thittam: கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என விஜய் வாக்குறுதியாக கொடுத்தார். தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மற்றம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யும். இந்த நிலையில், இந்த திட்டம் இன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 22 முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த 1.25 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கி வைத்த அவர், குழந்தைகளுக்கு தனது கையால் தங்க மோதிரத்தை அணிவித்தார்.

அந்த வகையில், மேடையில் முதல்வர் விஜய் முத்து யாழினி என்ற முதல் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார். அப்போது, குழந்தை விஜய்யின் முகத்தை பார்த்து சிரித்துள்ளது. இந்த காட்சிகளை அங்கு இருப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தங்க மோதிரம் யாருக்கு கிடைக்கும்?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தை பெற தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்க வேண்டும். தாய் RCH ID உடன் PICME-ல் பதிவு செய்திருக்க வேண்டும். இரட்டை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும். தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கிடைக்காது. 

தனியார் மருத்துவமனையில் பிறந்து, அரசு மருத்துவமனையில் அனுமதித்தாலும்  தங்க மோதிரம் கிடைக்காது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கருவில் குழந்தை இறந்தால் தங்க மோதிரம் கிடைக்காது. தமிழகத்தை சேர்ந்தவர் அல்லாதவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu