SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது..! 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக இந்து அமைப்பினர் மகிழ்ச்சி..

திருப்பரங்குன்றத்தில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கந்தர் தர்காவிற்கு 50 மீட்டர் தொலைவில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் இதோ.

Written By Yuvashree M
Published: Nov 28, 2026, 16:55 IST | Updated: Nov 28, 2026, 17:21 IST
Image Credit: Tiruparangundram Deepam Lit | X Page
Join

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை சஸ்பெண்ட் செய்துள்ள உச்சநீதிமன்றம் தீபம் ஏற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்தும் உத்தவிட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றப்பட்டது..!

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற  அனுமதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி இருந்தது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் பார்த்திபன், வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், CRPF IG திருமலா விக்ரம், கண்காணிப்பு சிறப்பு அலுவலர் வீரராகவ், வருவாய் கோட்டாட்சியர் கெரனாபுக் லித்தியா, CRPF IG முகேஷ் குமார், ஸ்தானிக பட்டர்கள் சாமிநாதர், ரமேஷ், அஜித் ஆகியோருக்கு மலை மேல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது தெரியவந்தது. தீபம் ஏற்றும் போதும் அவர்கள்தான் அருகில் இருந்தனர்.

மேலும் படிக்க | காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!

100 ஆண்டு கனவு நிறைவேறியதாக கோஷம்..!

திருப்பரங்குன்றம் மலை மீது, தீபம் ஏற்றப்பட இருந்த சமயத்தில் தங்களின் 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக, அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர் முழக்கமிட்டனர். அதோடு, அவர்கள் பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

திருப்பரங்குன்றம் வழக்கு..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் 28 நவம்பர் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீப தினத்தன்று ஒருமுறை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் நடைபெறவுள்ள தீபமேற்றும் நிகழ்வில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பக்தர்கள் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படை உறுதிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவையும் உச்ச நீதிமன்றம் இடை நீக்கம் செய்திருந்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை சஸ்பெண்ட் செய்துள்ள உச்சநீதிமன்றம் தீபம் ஏற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்தும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 13 பேர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவும் உத்தரவு வெளியாகியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு இதனை விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதியில் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். கோயில் நிர்வாகத்தைப் பொறுப்பேற்கவும் நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்  நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகள் டிசம்பர் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் விசாரணை, வரும் நாட்களில் நடக்கும் என்பது தெரிகிறது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது... டிச.11 வரை சிறை - கவனம் பெறும் POSH சட்டம் என்றால் என்ன? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES