• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /மதுரையில் ஷாக் தீர்ப்பு... 7 பேரை எரித்து கொன்ற வழக்கு: 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை!

மதுரையில் ஷாக் தீர்ப்பு... 7 பேரை எரித்து கொன்ற வழக்கு: 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை!

Madurai Latest News Updates : மதுரை அருகே 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்து மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Written BySudharsan G
Published: Aug 19, 2026, 18:42 IST|Updated: Aug 19, 2026, 18:48 IST
joinshare
மதுரையில் ஷாக் தீர்ப்பு... 7 பேரை எரித்து கொன்ற வழக்கு: 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை!
Image Credit: Representational Image : Court Verdict / Zee Bureau

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai Latest News Updates : மதுரை சேடபட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பாண்டீஸ்வரி என்பவருக்கும் 2013ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணன் பிரிந்து சென்று சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சமரச பேச்சுவார்த்தையில் வாக்குவாதம்

கண்ணனின் குடும்பத்தினர் அவரை சட்ட ரீதியாக முறைப்படி விவாகரத்து செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தினர். இதுதொடர்பாக உள்ளூரில் தம்பதி இடையே சமரசம் பேசப்பட்டது. அப்போது, கண்ணனின் குடும்பத்தினர் பண இழப்பீடு தருவதாக கூறி உள்ளனர். ஆனால், அதை பாண்டீஸ்வரி ஏற்க மறுத்துள்ளார்.

2015இல் நடந்த சம்பவம்

இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்து, கடந்த 2015ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி அதிகாலையில் பாண்டீஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி, சகோதரர் ராஜபாண்டி ஆகியோர் கண்ணனின் வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

7 பேர் பலி

இதில் கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், தங்கை சுகன்யா, சிறுவர்கள் சங்கீதா, சஞ்சித், வினித் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 குற்றவாளிகள்

இதுதொடர்பாக, வழக்குத் தொடரப்பட்டது. கொலை, சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் சேடபட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இவ்வழக்கை மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்ற விசாரித்தது. நீதிபதி உதயவேலவன், குற்றம்சாட்டப்பட்ட பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்தார்.

தண்டனை விவரம்

அவர்களுக்கு 7 கொலைகளுக்கும், கூட்டுச் சதிக்கும் சேர்த்து தலா 8 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டை எரித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த குற்றச் சம்பவத்தில், நீண்டகால விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி உள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu