• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /17 ஆண்டுகளுக்கு பின்... மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு... பூஜைகள் அட்டவணை இதோ

17 ஆண்டுகளுக்கு பின்... மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு... பூஜைகள் அட்டவணை இதோ

Madurai Meenakshi Amman Kovil : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அந்த வகையில், மீனாட்சியம்மன் கும்பாபிஷேகத்தை ஒட்டிய பூஜைகளின் அட்டவணை விவரங்களும் வெளியாகி உள்ளன.

Written BySudharsan G
Published: Aug 20, 2026, 14:17 IST|Updated: Aug 20, 2026, 14:32 IST
joinshare
17 ஆண்டுகளுக்கு பின்... மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு... பூஜைகள் அட்டவணை இதோ
Image Credit: Madurai Meenakshi Amman Kovil | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai Meenakshi Amman Kovil Kumbabishekam: பிரசித்தி பெற்ற, உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. கடைசியாக 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2018ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது.

2018இல் தீ விபத்து

ஆனால், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று மீனாட்சி அம்மன் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, வீரவசந்தராயர் மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாகவும், சீரமைப்புக்கு தகுந்த கற்கள் கிடைக்கவில்லை என்பதன் காரணமாகவும் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் மொத்தமாக முடங்கின. எனவே, கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

திருப்பணிகள் நடைபெற்றன

அதேநேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளும் நடைபெற்றன. திமுக ஆட்சியில் கோவில் நிதி ரூ.15.81 கோடி, உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி ஒதுக்கப்பட்டன. இதனால், மொத்தம் ரூ.32.28 கோடியில் திருப்பணிகள் நடந்தன. யாகசாலை, திருப்பணி உள்ளிட்டவை மூலம் உபயதாரர்களிடம் ரூ.21 கோடி திரட்டப்பட்டது.

செப்டம்பர் 17இல் கும்பாபிஷேகம்

இந்நிலையில், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணிமுதல் 8.10 மணிக்குள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் தொடங்கும். செப். 11ஆம் தேதிவரை செப். 17ஆம் தேதி காலை வரை யாகசாலை பூஜையும் நடக்கிறது.

பூஜைகள் அட்டவணை

செப்டம்பர் 6ஆம் தேதி: காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் தொடர்பான பூஜை தொடங்குகிறது.

செப்டம்பர் 7ஆம் தேதி: காலை 7 மணிமுதல் காலை 10 மணிவரை நவகோள் யாகவேள்வி நடைபெற இருக்கிறது.

செப்டம்பர் 8ஆம் தேதி: வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.

செப்டம்பர் 9ஆம் தேதி: வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்தவரப்படும். அன்றைய தினம் மாலை புனித மண் எடுத்து வரப்படும்.

செப்டம்பர் 10ஆம் தேதி: பேரொளி வழிபாடு மற்றும் மாலையில் முளைப்பாரி இடுதல் நடைபெற இருக்கிறது.

செப்டம்பர் 11ஆம் தேதி: மாலை முதல்கா யாகசாலை பூஜை தொடங்குகிறது. செப்டம்பர் 17ஆம் தேதிவரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

செப்டம்பர் 17ஆம் தேதி: அன்று காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்களுக்கும், ராஜ கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் மூலஸ்தானத்திற்கு காலை 7.55 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கும். சுந்தரேஸ்வரர் மூலஸ்தானத்திற்கு காலை 8.10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை மண்டல பூஜைகள் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோர் கூடும் நிகழ்வு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை மாநகரத்திற்கு வருகை தருவார்கள். எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறை, கூட்டநெரிசல் ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில் நகரம் முழுவதும் கும்பாபிஷேகத்தினை நேரலையில் கண்டு, தரிசனம் செய்யும் வகையில், முக்கியமான இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu