SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அரை ஆடை புரட்சி டூ ஆலய நுழைவு வரை... மதுரையும் சுதந்திர போராட்டமும்...

இந்தியாவின் விடுதலைப் போராட்டப் பாதையை திசைதிருப்பிய புரட்சி பூமிதான் மதுரை. 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் நிலைத்து நிற்கும் சுதந்திர போராட்டங்கள் மற்றும் சுதந்திர போராட்ட சின்னங்கள் ஆகியவற்றை இங்கு நினைவுகூரலாம்.

Written By Sudharsan G
Published: Aug 10, 2026, 12:36 AM IST | Updated: Aug 10, 2026, 12:47 AM IST
Join

இந்திய விடுதலை வரலாற்றில் மதுரைக்கு என்று தனித்துவமான இடம் உண்டு. மதுரையை வெறும் கோவில் நகரம் மட்டுமல்ல. அண்ணல் காந்தியடிகளின் எண்ண ஓட்டத்தையே தலைகீழாக மாற்றியது எனலாம்.

தேசத்தின் விடுதலைப் போராட்டப் பாதையைத் திசைதிருப்பிய புரட்சி பூமிதான் மதுரை. அந்த வகையில் இந்திய விடுதலை போராட்ட வாழ்வில் அரை ஆடைப் புரட்சி, ஆலய நுழைவு போராட்டம், மதுரையில் நிலைத்து நிற்கும் சுதந்திர போராட்ட சின்னங்கள் ஆகியவற்றை 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நினைவுக்கூரலாம்.

அரை ஆடைப் புரட்சி

1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மதுரைக்கு வருகை தந்த காந்தியடிகள், மேலூர் சாலையில் சென்றபோது ஏழை விவசாயிகள் மேலாடையின்றி வயலில் உழைப்பதைக் கண்டார்.

அந்த நொடியில் அவர் மன உளச்சல் அடைந்தார். அழரது தனது ஆடம்பர ஆடைகளை துறந்து அரை ஆடை உடுத்த முடிவெடுக்க காரணமானது.

மேலமாசி வீதி

காந்தியடிகள் தனது ஆடம்பர ஆடைகளை களைந்து எளிய அரை ஆடை உடுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்தான் மேலமாசி வீதி.

மேலமாசி வீதியில் அவர் தங்கியிருந்த இந்த இடம், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய திருப்பமான 'ஆடைப் புரட்சி' நடந்த நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.

மதுரையின் சுதந்திர போராட்டம்

காந்தி நினைவு அருங்காட்சியகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை ஆற்றங்கரை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தடையை மீறி தேசபக்த பேச்சாளர்களும், காந்தியடிகளும், சுப்பிரமணிய பாரதியார் போன்ற தலைவர்களும் பெருந்திரளான மக்களைச் சந்தித்து உரையாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக வைகை ஆற்றங்கரைத் திடல்கள் விளங்குகின்றன.

ஆடை மாற்றத்தில் தொடங்கி சமூக சீர்திருத்தம் வரை, மதுரையில் ரத்தமும் சதையுமாக வளர்ந்த காந்திய சித்தாந்தமே இந்திய சுதந்திரத்தின் பிரகாசமான ஜோதியாக மாறியது. வைகை நதிக்கரையில் மூண்ட அந்த தேசிய உணர்வு, இந்தியாவின் விடுதலை வரலாற்றில் என்றும் அழியாத சுவடாக நிலைத்து நிற்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES