• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

வீடு கட்டுபவர்களுக்கு விரைவாக அனுமதி அளிப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரப் பகிர்வு வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 10, 2026, 03:58 PM IST|Updated: Oct 10, 2026, 04:04 PM IST
joinshare
வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு
Image Credit: Tamil Nadu Building Permission Update

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

2

Explainer: EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.... ECR கணக்கீடு, சம்பளம், ஓய்வூதியம், PF-இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

3

வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

4

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் பல உச்சங்களை எட்டப்போகும் 3 ராசிகள் இவைதான்

5

பிரதமர் மோடி வருகை... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் வரம்பை கணிசமாக உயர்த்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் இனி DTCP அல்லது CMDA போன்ற தலைமை அலுவலகங்களுக்கு அலைந்து திரியாமல், தங்களின் உள்ளாட்சிப் பகுதிகளிலேயே எளிதாகவும் விரைவாகவும் திட்ட அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

குடியிருப்பு கட்டிடங்களுக்கான புதிய உச்சவரம்பு

முன்பு குடியிருப்பு கட்டிடங்களுக்கு உள்ளாட்சிகள் மூலம் அதிகபட்சமாக 10,000 சதுர அடி வரையிலும், 8 குடியிருப்புகள் வரையிலும் மட்டுமே திட்ட அனுமதி வழங்க அதிகாரம் இருந்தது. தற்போது திருத்தப்பட்ட விதிகளின்படி இந்த உச்சவரம்பு பரப்பளவு மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:  

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்: மொத்தம் 1,500 சதுர மீட்டர் (சுமார் 16,140 சதுர அடி) பரப்பளவு வரையிலும், அதிகபட்சமாக 16 குடியிருப்புகள் வரையிலும் அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள்: மொத்தம் 1,200 சதுர மீட்டர் (சுமார் 12,912 சதுர அடி) பரப்பளவு வரையிலும், அதிகபட்சமாக 12 குடியிருப்புகள் வரையிலும் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

தளங்களின் வரம்பு: தரைத்தளம் + 2 தளங்கள் அல்லது ஸ்டில்ட் + 3 தளங்கள் மற்றும் 14 மீட்டருக்கு மிகாத உயரம் கொண்ட கட்டிடங்களுக்கு இந்த அதிகாரப் பகிர்வு பொருந்தும்.  

வணிக கட்டிடங்களுக்கும் 5,380 சதுர அடியாக உயர்வு

குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி வரம்பும் பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வணிக கட்டிடங்களுக்கு 2,000 சதுர அடி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 500 சதுர மீட்டர் அதாவது 5,380 சதுர அடி வரை உள்ள வணிகக் கட்டிடங்களுக்கு நேரடியாகவே அனுமதி வழங்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.  

சாமானிய மக்களுக்கு நேரடிப் பலன்

இந்த அதிகாரப் பகிர்வு மூலம் நிர்வாக நடைமுறைகள் பரவலாக்கப்பட்டு, கட்டிட அனுமதி கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது உள்ளாட்சி நிலையிலேயே துரிதமான முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக நடுத்தர மக்கள், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவோர் மற்றும் சிறு வணிகர்கள் தாமதமின்றித் தங்களது கட்டுமானப் பணிகளைத் தொடங்க இந்த உத்தரவு பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu