• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /நகைக்கடை கொள்ளை வழக்கு : மத்திய சிறையில் இன்ஸ்டா பிரபலம்..29ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

நகைக்கடை கொள்ளை வழக்கு : மத்திய சிறையில் இன்ஸ்டா பிரபலம்..29ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்கம் வரை கொள்ளையடிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எப்படி போலீசாருக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Written ByYuvashree M
Published: Nov 15, 2026, 08:36 IST|Updated: Nov 15, 2026, 11:10 IST
joinshare
நகைக்கடை கொள்ளை வழக்கு : மத்திய சிறையில் இன்ஸ்டா பிரபலம்..29ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!
Image Credit: Tanishq Gold Robbery | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

2

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

3

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

4

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

5

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பிரபல துணிக்கடையான ‘தனிஷ்க்’ கடையில், கடந்த 12ஆம் தேதியன்று அதிகாலை 15 கிலோ வரை தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில், கொள்ளையடிக்க கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைக்கவில்லை, குழுவாக வரவில்லை என்பதை போலீசார் விசாரணை மூலமாக தெரிந்து கொண்டனர்.

துப்பு கிடைத்தது எப்படி?

தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் போலீசார் சில வித்தியாசமான விஷயங்களால்தான் துப்பு கண்டுபிடித்தனர். கொள்ளை சம்பவம் எங்கு நடந்ததோ, அந்த இடத்தில் தனிப்படை நடத்தி விசாரணையை தொடங்கிய மதுரை காவல்துறையினர், அந்த நகைக்கடை புதிதாக திறக்கப்பட்ட நாளில் இருந்து, கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, இங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு நபர் தொப்பி அணிந்து கொண்டு, அடிக்கடி கடைக்கு வந்து, நகை வாங்குவது போல கடையின் அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நோட்டமிட்ட ‘நிஷாந்த்’ என்கிற இளைஞர் மீது, போலீசாரின் சந்தேகம் திரும்பியது.

சந்தேகத்திற்குறிய நபர் தலைமறைவு..!

போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நிஷாந்தின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதனால், நிஷாந்த் மீது சந்தேகம் வலுத்தது. அவருடைய பெற்றோர் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே, நிஷாந்தின் சமூக வலைதள பக்கங்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதிலும் குறிப்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தனர். அப்போது பிரபல யூடியூபரான ‘மீனாட்சி’ என்பவருடன் நிஷாந்த் நெருங்கிய நட்பில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும் படிக்க | காவல் நிலையத்தில் தற்கொலை... விசாரணைக்கு வந்தவரின் விபரீத செயல் - மதுரையில் நடந்தது என்ன?

வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை..!

யூடியூபர் மீனாட்சியை, அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடந்த 15 கிலோ தங்க நகை கொள்ளை சம்பவத்தில் மீனாட்சிக்கு நேரடி தொடர்பு இருப்பது புலப்பட்டது.

தங்கம் மீட்பு..!

கைது செய்யப்பட்ட யூடியூபர் மீனாட்சி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அங்கு அவர் ஒரு வயல்வெளியில் சாக்குப்பையில் கட்டி, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ தங்க நகைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

யார் இந்த் மீனாட்சி?

தமிழில் இருக்கும் பிரபலமான இன்ஸ்டா இன்ஃப்ளூவன்ஸர்களுள் ஒருவராக இருக்கிறார், மீனாட்சி. லைஃப்ஸ்டைல், டெக்னாலஜி உள்ளிட்ட விஷயங்களை வைத்து வீடியோக்களை பதிவிடும் இவர், அடிக்கடி பல்வேறு கடைகளுக்கான ப்ரமோஷன் விடியோக்களையும் செய்து வருகிறார்.

இவரை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற போது, அவருடைய குடும்பத்தினர் அவரை பயப்பட வேண்டாம் என்று கூறி, என்ன நடந்ததோ அதை அப்படியே கூறுமாறு கூறினர். அவருடைய தாயார், ‘பொம்பள பிள்ளைய இப்படி பண்றீங்களே..’ என போலீசாரை கடிந்து கொண்டார்.

மேலும் படிக்க | மதுரை நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உள்பட 2 பேர் கைது - சிக்கியது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime