SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளிக்கு பின் ஊர் திரும்ப... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென் மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க

Diwali Special Trains: தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதற்கு தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சில சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளிக்கு பிறகு இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களின் அட்டவணை மற்றும் பிற விவரங்களை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 04, 2026, 05:54 PM IST | Updated: Nov 04, 2026, 06:08 PM IST
Join

Southern Railway, Madurai Division Special Train: தீபாவளி பண்டிகை வரும் நவ. 8ஆம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தீபாவளி பண்டிகைக்கு பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதேபோல், தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சொந்த ஊரில் இருந்து புறப்படுபவர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. அந்த சிறப்பு ரயில்களின் விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் வழித்தடம் மாற்றம் - முழு விவரம்

தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்

தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06089) தாம்பரத்தில் இருந்து தீபவாளிக்கு அடுத்து நாள் (நவ. 9 - திங்கள்) அன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06090) செங்கோட்டையில் இருந்து நவம்பர் 10ஆம் தேதி (செவ்வாய்) மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (புதன்) அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

எத்தனை பெட்டிகள்?

தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 8, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 11, மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 2 இருக்கும்.

எங்கெல்லாம் ரயில் நிற்கும்?

தாம்பரம் - செங்கோட்டை இடையே செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் படிக்க | வந்தே பாரத் வேகத்தில் சீறிய வைகை எக்ஸ்பிரஸ்; 430 km தூரம்... வெறும் 5.30 மணிநேரம்...

எழும்பூர் - ராமேஸ்வரம் - எழும்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06037) நவம்பர் 10ஆம் தேதி (செவ்வாய்) நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, ராமேஸ்வரத்திற்கு அன்று மாலை 5.30 மணிக்கு சென்றடையும்.

ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 06038) நவம்பர் 10ஆம் தேதி (செவ்வாய்) இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (புதன்) காலை 11 மணிக்கு சென்றடையும்.

எத்தனை பெட்டிகள்?

ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள் - 2, ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள் - 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 4, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 2.

எங்கெல்லாம் ரயில் நிற்கும்?

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, ஆதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, தேவக்கோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் நின்று செல்லும்.

திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06164) வரும் நவம்பர் 10ஆம் தேதி (செவ்வாய்) அன்று இரவு 8 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (புதன்) காலை 11 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06163) வரும் நவம்பர் 11ஆம் தேதி (புதன்) அன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (வியாழன்) அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.

எத்தனை பெட்டிகள்?

ஏசி மூன்றாம் அடுக்கு பெட்டிகள் - 16, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 2, மாற்றுத்திறனாளிக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 1, லக்கேஜ் பெட்டி - 1.

எங்கெல்லாம் ரயில் நிற்கும்?

திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் இடையே திருவனந்தபுரம் மத்திய நிலையம், நெய்யாத்தங்கரை, குழித்துறை, நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கலப்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் படிக்க | இந்து மத விஷயத்தில் மட்டும்... கடும் நடவடிக்கைகளை எடுத்த அரசு... நீதிபதி கருத்து

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES