SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

Madurai Guruvayur Vistadome Rail: மதுரை - குருவாயூர் வழித்தடத்தில் கண்ணாடி மேற்கூரை ரயில் பெட்டிகள் இருக்கும் வகையில், ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக - கேரளா எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்க முடியும்.

Written By Umabarkavi K
Published: Oct 18, 2026, 09:38 AM IST | Updated: Oct 18, 2026, 09:49 AM IST
Join

Madurai Guruvayur Vistadome Rail: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் புது புது ரயில்களை இயக்கி வருகிறது. வந்தே பாரத் ரயில், அமிர்த் பாரத் ரயில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் என அதிவேக ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், தமிழக - கேரளா எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்க விஸ்டாடோம் எனப்படும் கண்ணாடி ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

கண்ணாடி மேற்கூரை ரயில்

ரயில் பயணிகள் இயற்கை அழகை ரசித்தப்படி செல்வதற்காக விஸ்டோடம் என்ற பெயரிலான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பெட்டிகளில் மேற்கூரை கண்ணாடியாக இருக்கும். தற்போது வந்தே பாரத், அம்ரித் பாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 

இதேபோல, விஸ்டோடம் ரயில் பெட்டியில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் மேற்கூரையில் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும். ரயில் பெட்டிக்குள் இருந்தப்படியே வெளியே பார்த்து ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் பெறும் இடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், மதுரை - குருவாயூர் இடையே விஸ்டடோம் ரயில் மேற்கூரை கண்ணாடி ரயில் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: தொடர் விடுமுறை... சென்னை டூ காரைக்குடி சிறப்பு ரயில் - மதுரை கோட்டம் அறிவிப்பு

அக்.23 முதல் மதுரை - குருவாயூர் இடையே கண்ணாடி ரயில்

தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் (16327 / 16328) இரண்டு விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. கேரளாவில் ஓடும் ஒரு ரயிலில் முதல் முறையாக இந்த வசதி அறிமுகமாகிறது. இதற்கான சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது. அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பரந்த காட்சி அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள, புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டியானது, அழகிய வழித்தடத்தில் உள்ள பசுமையான நிலப்பரப்பின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைப் பயணிகளுக்கு வழங்கி, ரயில் பயண அனுபவத்தை சூப்பராக வழங்கும்.

மதுரையில் இருந்து குருவாயூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 2.15 மணிக்கு குருவாயூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் குருவாயூரில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.10 மணிக்கு மதுரைக்கு வந்தடைகிறது. இந்த ரயிலில் தான் இரண்டு விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.  

விஸ்டாடோம் ரயில் பெட்டிகளுடன் மதுரையில் இருந்து அக்டோபர் 22ஆம் தேதி ரயில் சேவை தொடங்குகிறது. அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை இயக்கப்படும். குருவாயூரில் இருந்து அக்டோபர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி இரண்டு விஸ்டாடோம் ரயில் பெட்டிகளுடன்  இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்  மதுரையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூருக்கு சென்றடைகிறது. இதனால்,  கேரளா எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை  ரசிக்க முடியும்.

மேலும் படிக்க: மதுரை: மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை... விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது

சிறப்பம்சம் என்ன?

முழுக்க கண்ணாடி: விஸ்டாடோம் ரயில் பெட்டியில் மேற்கூரை முழுவதும் கண்ணாடி பேனல், பக்கவாட்டில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சுழலும் சீட்: விஸ்டாடோம் ரயில் பெட்டிகளில்  இயற்கை அழகை பார்க்க ஏதுவாக 180 டிகிரி சுழலும் ரொட்டேட்டிங் சீட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

360 டிகிரி வியூ: விஸ்டாடோம் ரயில் பெட்டிகளில்  மலைகள், சுரங்கங்கள், அருவிகள், ஆறுகள், காடுகள் என கொல்லம் - செங்கோட்டை பாதையின் அத்தனை அழகையும் நேரடியாக காணலாம்.

வசதிகள்:  ஒரு பெட்டியில் 44 சீட்கள் மட்டும், ஏசி, வைபை, ஜி.பி.எஸ் அடிப்படையிலான தகவல் திரை, ஆட்டோமேட்டிக் கதவுகள், பொருத்தப்பட்டுள்ளன.

தயாரிப்பு: இந்த ரயில் சென்னை பெரம்பூர் ICF-ல் தயாரிக்கப்பட்டது.

மதுரை - குருவாயூர் வழித்தடத்தில் விஸ்டாடோம் ரயில் இயக்க வேண்டும் என பல வருட கோரிக்கை இருந்த நிலையில் தற்போது நிறைவேறியுள்ளது. இதனால், மதுரை, தென்காசி, செங்கோட்டை பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  இதற்கான டிக்கெட் கட்டணத்தை இன்னும் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம், முன்பதிவு எப்போது தொடங்கும் என்பது குறித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES