• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /செப்.16,17 தேர்வுகள் ரத்து.. காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்.. அலர்ட் மாணவர்கேள!

செப்.16,17 தேர்வுகள் ரத்து.. காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்.. அலர்ட் மாணவர்கேள!

TN Quarterly Exam Holidays: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், செப்டம்பர் 16,17ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதியில் நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 15, 2026, 10:04 AM IST|Updated: Sep 15, 2026, 10:19 AM IST
joinshare
செப்.16,17 தேர்வுகள் ரத்து.. காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்.. அலர்ட் மாணவர்கேள!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Quarterly Exam Holidays: தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்பிறகு, எப்போது காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்தும், காலாண்டு தேர்வு அட்டவணையில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.

காலாண்டு தேர்வு

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாளை (செப்டம்பர் 16) முதல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. தேர்விற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி, 1 முதல் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

மேலும், 3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை காலாண்டு தேர்வு தொடங்கி, செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதே நேரத்தில், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை காலாண்டு தேர்வு தொடங்கி, செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  செப்டம்பர் 16ம்  தேதியான நாளை 3 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு துவங்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க: மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: செப். 17இல் காய்கறி சந்தை இயங்காது - முக்கிய அறிவிப்பு

காலாண்டு தேர்வு விடுமுறை

தேர்வுக்கு பிறகு,  செப்டம்பர் 25ஆம் தேதி முதுல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை  கிடைக்கவுள்ளதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர். அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கும் என தெரிகிறது.  மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் நாளான 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை… pic.twitter.com/IrsYmznN3e

— District Collector, Madurai (@Collector_MDU) September 12, 2026

மேலும் படிக்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்

அதே நேரத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16,17ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, செப்டம்பர் 16ஆம் தேதி, 17ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகளை மாற்றி அமைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற இருந்த காலாண்டு தேர்வு, செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் செப்டம்பர் 24,25ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 16,17ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை தவிர, மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தேர்வு அட்டவணைப்படி வழக்கம்போல் காலாண்டு தேர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மதுரை மக்களே... இந்த 4 நாட்களில்... மீனாட்சியம்மன் கோவில் கட்டண தரிசனம் ரத்து
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Education