• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /வேலை கொடு... பெங்களூரு கூகுள் அலுவலகத்தில் மனு - கன்னட அமைப்பின் நூதன செயல்

வேலை கொடு... பெங்களூரு கூகுள் அலுவலகத்தில் மனு - கன்னட அமைப்பின் நூதன செயல்

பெங்களூருவில் உள்ள கூகுள் உள்ளிட்ட 30 முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக் கோரி கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பு மனு அளித்துள்ளது.

Written BySudharsan G
Published: Nov 05, 2026, 01:35 PM IST|Updated: Nov 05, 2026, 01:46 PM IST
joinshare
வேலை கொடு... பெங்களூரு கூகுள் அலுவலகத்தில் மனு - கன்னட அமைப்பின் நூதன செயல்
Image Credit: Pro-Kannadigas request to Google | Screen Grab: X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

2

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

3

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

4

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

5

திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் செயல்பட்டு வரும் கூகுள் உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கன்னடர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என குரல் அம்மாநிலத்தில் எழுந்துள்ளது.

இதற்காக கன்னட ஆதரவு அமைப்பினர் ஐடி நிறுவனங்களுக்கு நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருங்கே எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணி பேரணிக்கு வராதவர்கள் சஸ்பெண்ட்! காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு..

30 ஐடி நிறுவனங்களிடம் மனு

கர்நாடக ரக்ஷண வேதிகே (Karnataka Rakshana Vedike - KRV) என்ற அமைப்பு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சுமார் 30 ஐடி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளது.

கூகுள் நிர்வாகிகளுடனும் சந்திப்பு

பெங்களூருவின் மகோதேவபுரா பகுதியில் உள்ள பிரிகேட் வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகளை அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்திற்கும் சென்று இதே கோரிக்கையை முன்வைத்து மனு அளித்தனர்.

கன்னட அமைப்பின் குற்றச்சாட்டுகள்

உள்ளூர் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும்; பணியாளர் தேர்வின்போது உள்ளூர் விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த சந்திப்பில் பங்கேற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகள், அமைப்பின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்ததாக கேஆர்வி அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அக்னிவீர்களுக்கு மத்திய அரசின் மெகா அறிவிப்பு: சேவை காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்வு

அடுத்தகட்ட திட்டம்

மேலும் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கவது தொடர்பாக விரிவான அறிக்கையை மாநில அரசிடம் சமர்பிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் கன்னட அமைப்பு திட்டமிட்டுள்ளது.

முதல்வரின் எச்சரிக்கையும் அறிவுறுத்தலும்

முன்னதாக, உள்ளூர் மக்களைத் திட்டமிட்டு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். அதேவேளையில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கன்னட அமைப்புகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?

கடந்த 2024ஆம் ஆண்டு கர்நாடக அமைச்சரவை, தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், தொழில்துறை நிறுவனங்களில் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவின் ஐடி துறையில் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | மல்டிபேக்கர் பங்குகளை அடையாளம் காண்பது எப்படி? Kwala Intel கூறும் 7 முக்கிய அளவுகோல்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
India