• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /BRICS 2026: அதிபர் புதின் வருகைக்கு முன் நொய்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய 3 ரஷ்ய விமானங்கள்

BRICS 2026: அதிபர் புதின் வருகைக்கு முன் நொய்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய 3 ரஷ்ய விமானங்கள்

BRICS Summit 2026: பிரிக்ஸ் உச்சிமானாட்டிற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை நொய்டா விமான நிலையத்தில் மூன்று ரஷ்ய இராணுவ விமானங்கள் தரையிறங்கின. இந்த விமானங்களில் ரஷ்யாவின் அட்வான்ஸ் டீமும் இராணுவ அதிகாரிகளும் வந்திருந்தனர்.

Written BySripriya Sambathkumar
Published: Sep 10, 2026, 09:57 IST|Updated: Sep 10, 2026, 16:19 IST
joinshare
BRICS 2026: அதிபர் புதின் வருகைக்கு முன் நொய்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய 3 ரஷ்ய விமானங்கள்
Image Credit: Representative: AI / BRICS Summit 2026

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

BRICS Summit 2026: புது டெல்லியில் செப்டம்பர் 12, 13 தேதிகளில் நடக்கவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்காக ஏற்பாடுகள் முழுமுனைப்பில் நடந்துகொண்டிருக்கின்றன. தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்து மாற்றங்களும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா வரும் உலகத் தலைவர்கள்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பல உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வரவுள்ளனர். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட பின்வரும் தலைவர்கள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது:

  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
  • சீன அதிபர் ஷி ஜின்பிங்
  • ஈரான் அதிபர்மசூத் பெஷெஷ்கியன்
  • தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா
  • எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி
  • இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ
  • பெலாரஸ் அதிபர்அலெக்சாண்டர் லுகாஷென்கோ
  • கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ்
  • பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர்

இவர்களைத் தவிர சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற கூட்டாளர் நாடுகளைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் படிக்க | How Dare You? மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

ரஷ்ய அதிபருக்கு முன் இந்தியா வந்த அட்வான்ஸ் டீம்

பிரிக்ஸ் உச்சிமானாட்டிற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை நொய்டா விமான நிலையத்தில் மூன்று ரஷ்ய இராணுவ விமானங்கள் தரையிறங்கின. இந்த விமானங்களில் ரஷ்யாவின் அட்வான்ஸ் டீமும் இராணுவ அதிகாரிகளும் வந்திருந்தனர். அதிகாலை 5:30 மணியளவில் இந்த மூன்று ரஷ்ய விமானங்களும் ஓடுபாதையை வந்தடைந்தன. இதில் ரஷ்யாவின் இராணுவப் போக்குவரத்து விமானமான IL-76-ம் அடங்கும். ரஷ்யாவின் அட்வான்ஸ் டீம் உறுப்பினர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்த விமானங்களின் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.

நொய்டா விமான நிலையத்தின் முதல் வெளிநாட்டு விமானம்

குறிப்பிடத்தக்க வகையில், புதிதாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ள இந்த விமான நிலையத்தில் ஒரு வெளிநாட்டு விமானம் தரையிறங்கியது இதுவே முதல் முறையாகும். புது தில்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புதின் வருகை தரவுள்ள நிலையில், அதற்கு முன் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்த குழு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டிற்காக டெல்லி விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நொய்டா விமான நிலையத்தில் நாள் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய விமானங்கள்

புதன் கிழமை முழுவதும் அந்த மூன்று ரஷ்ய இராணுவ விமானங்களும் நொய்டா விமான நிலையத்தின் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து ரஷ்யக் குழுவினரும் விமானங்களின் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பைக் கண்காணித்து வருகின்றனர்.

பொதுவாக, வெளிநாட்டு இராணுவ விமானங்கள் இந்தியா வருவதற்கு தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, நொய்டா விமான நிலையத்தில் ரஷ்ய விமானங்கள் தரையிறங்கியது இந்த புதிய விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு பெண்களுக்கு வழங்கும் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை விதிகள் மாற்றம்! explained

செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் தில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026

18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவார்.

இந்த பின்னணியில், நொய்டா விமான நிலையத்தில் ரஷ்ய இராணுவ விமானங்கள் தரையிறக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருப்பது, வெளிநாட்டு முக்கியப் பிரமுகர்களின் வருகை மற்றும் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றுதல் தொடர்பான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

புது தில்லியில் நடைபெறவுள்ள இந்த முக்கிய இராஜ்ஜீய நிகழ்விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், நொய்டா விமான நிலையத்திற்கு ரஷ்ய விமானங்கள் வந்தடைந்தது இந்த ஏற்பாடுகளின் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | Holiday | மாணவர்களுக்கு செப்டம்பர் 11 விடுமுறை! அரசு திடீர் அறிவிப்பு பின்னணி என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
India