இந்தியாவை பொருத்தவரை, புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதாக மக்களிடையே கருதப்படுகிறது. இதனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழலும் உருவாகிறது. இதை தவிர்க்க, மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், நேற்று 137 வகையான, மொத்தம் 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது, அடுத்த மாதம் 9ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
மேற்கூறியவை போல, மொத்தம் 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

னரிக் மற்றும் பயோசிமிலர் புற்றுநோய் மருந்துகள் 93 சதவீதம் வரை மலிவான நிலையிலும், இதனால் அதிக விலை கொண்ட மருந்து விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. இப்படி அதிரடியாக விலை குறைக்கப்பட்டிருப்பது அனைத்து மருந்துகளுக்கும் பொருந்தாது என்றும், விலை அதிகமாக இருக்கும் இன்னும் பல மருந்துகள் இன்னும் அப்படியேதான் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விலை அதிகமான 65 மருந்துகளின் விலை இன்னும் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, Avastin எனும் புற்றுநோய் மருந்தானது 400 எம்.ஜி இன்னும் 1.24 லட்சமாக இருக்கிறது.
இப்படி 65 மருந்துகளின் விலை மாறாமல் இருப்பதற்கு காரணம், இந்த மருந்து விநியோகிஸ்தர் இருப்பதுதான் காரணம் என கூறப்படுகிறது.
Alectinib எனும் 150 எம்.ஜி மாத்திரையின் விலை ரூ.4,30,696ஆக உள்ளது. Destarlimab எனும் ஊசியின் விலை ரூ.3,90,691ஆகவும், Durvalumab எனும் மருந்தின் விலை ரூ.171324.27 ஆக உள்ளது. இப்படி பல்வேறு விலை அதிகமான மருந்துகள், விலை மாறாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் மூலம் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி வரை சேமிக்க முடியும் என அரசு எதிர்பார்ப்பை வைத்துள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்படும் மருந்து மற்றும் அதன் பிராண்டைப் பொறுத்தே இதன் பலன் அமையும் என திருத்தப்பட்ட பட்டியல் காட்டியிருக்கிறது. சில நோயாளிகளின் மருந்துச் செலவுகளில் பெரிய அளவில் குறைப்பு ஏற்படக்கூடும் என்றாலும், விலையில் மாற்றமில்லாத விலையுயர்ந்த மருந்துகளைச் சார்ந்திருப்பவர்களுக்கு, இந்த விலை குறைப்பு நடவடிக்கையினால் சிறிதளவு நிவாரணம் கிடைக்கலாம் அல்லது எந்த நிவாரணமும் கிடைக்காமலும் போகலாம் என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.