• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு... சென்னையில் இப்போ ரேட் எவ்வளவு?

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு... சென்னையில் இப்போ ரேட் எவ்வளவு?

LPG Cylinder Price Hike : வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.10.50 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

Written BySudharsan G
Published: Sep 01, 2026, 07:13 AM IST|Updated: Sep 01, 2026, 09:08 AM IST
joinshare
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு... சென்னையில் இப்போ ரேட் எவ்வளவு?
Image Credit: LPG Cylinder Price Hike, September 1 Update | AI Generated Image - ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

2

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

3

அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

4

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

5

விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசு: 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Commercial LPG Cylinder Price Hike : ஆங்கில மாதத்தின் முதல் நாள் அன்று சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்ற் செய்வது வழக்கம்தான். எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்தாலும் அவை இந்தியாவில் ஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு அளவில் விலை மாற்றம் ஏற்படும்.

அந்த வகையில், செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்வு கண்டுள்ளது. பல்வேறு முக்கிய நகரங்களில் ரூ.9.50 - ரூ.10.50 வரை விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் சிலிண்டர் விலை

குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.10.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2,916.50 ஆக விற்பனையாகிறது.

யார் யார் பாதிக்கப்படுவார்கள்...?

நாட்டின் தலைநகர் டெல்லியில் ரூ.2,738 ஆக விற்பனையாகி வந்த சிலிண்டர் ரூ.2,747.50 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்ற விலை ஏற்றம் ஹோட்டல்கள், இனிப்பு கடைகள் மற்றும் பிற உணவு தயாரிப்பு மற்றும் சிலிண்டரை பயன்படுத்தும் உற்பத்தி கூடங்களில் பெரும் தாக்கத்தை செலுத்தும். பண்டிகை காலம் நெருங்கும் சூழலில் இந்த சிலிண்டர் விலை ஏற்றம் வாடிக்கையாளர்களையும் நேரடியாக பாதிக்கலாம்.

வணிக சிலிண்டர் விலை நிலவரம்

நகரம்  பழைய விலை  இன்றைய விலை
டெல்லிரூ.2,738  ரூ.2,747.50
மும்பைரூ.2,691.50 ரூ.2,701
கொல்கத்தா ரூ.2,972.50ரூ.2,982
சென்னைரூ.2,906ரூ.2,916.50

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஆகஸ்டில் ஓரளவு குறைந்தது. முந்தைய ஜூலை மாதத்தில் ஏற்றம் கண்டது. அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று மீண்டும் ஏற்றம் கண்டிருக்கிறது.

வீட்டு உபயோக சிலிண்ர் விலை நிலவரம்

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதுமில்லை. வீட்டு உபயோக சிலிண்டர் டெல்லியில் ரூ.942, மும்பையில் ரூ.941.50, கொல்கத்தாவின் ரூ.968 மற்றும் சென்னையில் 957.50 ஆக நீடிக்கிறது.

5 கிலோ சிலிண்டர் விலை

அதேபோல், 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்படவில்லை. வழக்கமான 5 கிலோ சிறிய எல்பிஜி எரிவாயு சிலிண்டர் ரூ.349.50 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

மேலும் எக்ஸ்ட்ராலைட் சிலிண்டரின் விலை ரூ.339 ஆக உயர்ந்திருக்கிறது. 5 கிலோ வீட்டு உபயோகமில்லாத சிலிண்டரின் விலை என்பது 762 ரூபாயில் இருந்து 764 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
LPG