• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /’மகிழ்ச்சியாக வாழ் மகளே’ POCSO வழக்கு..10 வயது சிறுமிக்கு நீதிபதி உருக்கமான கடிதம்!

’மகிழ்ச்சியாக வாழ் மகளே’ POCSO வழக்கு..10 வயது சிறுமிக்கு நீதிபதி உருக்கமான கடிதம்!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு, எழுதிய கடிதம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 30, 2026, 11:22 AM IST|Updated: Sep 30, 2026, 11:41 AM IST
joinshare
’மகிழ்ச்சியாக வாழ் மகளே’ POCSO வழக்கு..10 வயது சிறுமிக்கு நீதிபதி உருக்கமான கடிதம்!
Image Credit: Judge Wrote Emotional Letter To POCSO Victim | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

”பள்ளிக்கு செல், நண்பர்களை உருவாக்கு, சிரித்து விளையாடு, மகிழ்ச்சியாக வாழ் மகளே” இதுதான், டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி ரஞ்சனி ரங்காவின் போசோ வழக்கில் சிறுமிக்கான வார்த்தைகள் ஆகும். 10 வயதே ஆன அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சனி ரங்கா, அந்த சிறுமிக்கு எழுதியிருக்கும் உருக்கமான கடிதம் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

போக்சோ வழக்கு:

கடந்த 2023ஆம் ஆண்டில், டெல்லியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு, அவள் ‘அங்கிள்’ என அழைக்கும் நம்பிக்கைக்குரிய ஒருவராக கருதப்பட்டவரே, பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இந்த சம்பவம் நடக்கும் போது அவருக்கு 7 வயது மட்டுமே. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.

இந்த போக்சோ வழக்கில், சிறுமி தைரியமாக நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணை நடந்த போது, அந்த சிறுமி நீதிபதியிடம், ‘என்னை இப்படி எய்த அந்த அங்கிளை, நான் வளர்ந்து பெரியவள் ஆகும் வரை சிறையிலிருந்து வெளியே விடக்கூடாது” என்று கோரிக்கை வைத்தார். நீதிபதி, அச்சிறுமியின் தைரியமான சாட்சியத்தை ஏற்றுக்கொண்டு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து, அந்த குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க | Explained : மகாராஷ்டிராவில் 75% வறட்சி! 1975 மாதிரி ஆகிடுமோ? அச்சத்தில் விவசாயிகள்..

சிறுமிக்கு நீதிபதி எழுதிய கடிதம்!

சிறுமியின் தைரியத்தை பாராட்டி, அச்சிறுமிக்கு நீதிபதி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், “நீ ‘அங்கிள்’ என அழைத்த அந்த நபர், இனி ஒரு போதும் சுதந்திரமான ஆளாக நடமாட முடியாது. அவர், தன்னுடைய வாழ்நால் முழுவதும் ஒரு கூண்டுக்குள்ளேயே வாழ்வார். அந்த கூண்டுக்குள்ளேயே வயதாகி, அங்கேயே இறந்தும் போவார். இனி ஒரு போதும் அவரால்  உன்னையோ, உன் தங்கையையோ, அல்லது வேறு எந்த குழந்தையையோ காயப்படுத்த முடியாது.

இந்த நீதிமன்றம் கண்டதிலேயே மிகவும் தைரியமான சிறுமி நீதான். நீ நீதிமன்றத்திற்கு வந்து, உனக்கு தீங்கு இழைத்த அந்த நபரை சுட்டிக்காட்டி, உண்மையை தைரியமாக சொல்லியிருக்கிறாய்.

உன் குழந்தைப்பருவத்தை, இந்த நீதிமன்றத்தால் உனக்கு திரும்பித்தர இயலாது. ஆனால், உன் வார்த்தைகள் செவிமடுக்கப்பட்டன. உன் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உனக்கு தீங்கு இழைத்த அந்த நபர், இனி சுதந்திர நபராக சூரிய ஒளியை பார்க்க இயலாது. மகளே, உன் வாழ்க்கையை நீ மகிழ்ச்சியாக வாழ். பள்ளிக்கு செல், நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள், சிரி, விளையாடு,  கனவு காண். உன் துணிச்சலை இந்த நீதிமன்றம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி, ரஞ்சனி ரங்காவின் இந்த கடிதத்தை பிற நீதிபதிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே சமயத்தில், இது நீதித்துறை வரலாற்றில் நடக்கும் அறிய விஷயமாகும். குழந்தைகளுக்கு இது போன்ற வன்கொடுமைகள் நடக்கும் போது, அவர்கள் வளர்கையில், அவர்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் காணாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால், இந்த நீதிபதியின் கடிதமானது, அந்த சிறுமிக்கு ஊக்கத்தையும், தைரியத்திற்கான அங்கீகாரத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த சிறுமியை போன்ற பலருக்கும் “நான் இங்கு இருக்கிறேன்” என யாரோ ஒருவர் தைரியம் கொடுப்பது போல இருப்பதாக மகளிர் பலர் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | நவராத்திரியில் 2 போனஸ்: அஞ்சல் துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை, செவிசாய்க்குமா அரசு?

Add Zee News as a Preferred Source
TAGS:
India