SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

SIR to Form 6: அனைத்து சர்ச்சைகளுக்கும்... தேர்தல் ஆணையர்கள் கூட்டாக விளக்கம்!

வாக்காளர் பட்டியலில் எஸ்ஐஆர் முறை, படிவம் 6 விவகாரம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவுவதாகக் கூறப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் கூட்டாக விளக்கத்தை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Sep 26, 2026, 21:48 IST | Updated: Sep 26, 2026, 22:01 IST
Image Credit: Sukhbir Singh Sandhu, Gyanesh Kumar, Vivek Joshi (Left to Right) | AI Generated Image : ChatGPT
Join

தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடைமுறையின் சில முக்கிய முடிவுகளுக்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தங்கள் கவலைகள் குறித்து அமைச்சரவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியதாகவும் ஊடகங்களில் வெளியாகின.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இதன் மத்தியில், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் விதிகள், படிவம் 6-ல் பெற்றோர்/முன்னோர் விவரங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் ECINET இணையதளத்தில் மறுஆய்வு குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

மேலும் படிக்க | வெளிச்சத்திற்கு வந்த SIR குளறுபடிகள்.. தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது?

SIR, Form 6 மூலம் வாக்காளர் சேர்க்கை மற்றும் ஆணையத்திற்குள் நிலவுவதாகக் கூறப்படும் உள் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் இணைந்து ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் அனுமதியே உள்ளது

படிவம் 6 மூலம் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது குறித்து விளக்கம் அளித்த ஆணையம், "எஸ்ஐஆர் நடைமுறையில் இது முதன்முறையாக செய்யப்படுவதால், பெற்றோரின் பெயர்கள் மூலம் குடும்பத் தொடர்பை உறுதிப்படுத்துவது தொடர்பான சில சந்தேகங்களும் கவலைகளும் எழுந்துள்ளன.

ஆனால், இந்த நடைமுறைக்கு உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. மேலும், எஸ்.ஐ.ஆர் காலகட்டம் தவிர மற்ற நேரங்களில், வாக்காளர் பதிவு விதிகள் 1960-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான படிவங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்" என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

கோவா வாக்காளர்கள் விவகாரம்

கோவாவில் 97 தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் விடுபட்ட நிர்வாக குறைபாடு குறித்தும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. "சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என கோவா தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Explained: தேர்தல் ஆணையத்தில் வெடித்த மோதல் - Form 6 சர்ச்சையும்... விளக்கமும்...

அதைத் தொடர்ந்து இதுவரை 81 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான Form 6 விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

ECINET போர்ட்டல் மறுஆய்வு

ECINET இணையதளம் தொடர்பான வெளிப்படைத்தன்மைக் குறைபாடுகள் குறித்த பிரச்னைகளை தீர்க்க, தேர்தல் ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் அமைய உள்ள இக்குழுவில், ஐஐடி மற்றும் ஐஐஐடி ஆகியவற்றைச் சேர்ந்த ஒரு சுயாதீன நிபுணர் இடம்பெறுவார். தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு முன், இணையதளப் பயன்பாட்டு அணுகல் மற்றும் அனைத்து ஐடி மென்பொருள் மேம்பாடுகளையும் இந்த குழு முழுமையாக சரிபார்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி எழுப்பிய கூட்டணி கட்சிகள்

தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே முரண்பாடு எழுந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளே கேள்வி எழுப்பின.

தற்போது தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும் சூழலில், இதனை வரவேற்று என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசிய கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு அளித்த விளக்கம்

அதில், "தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ். சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஒருமித்த விளக்கமானது.

நமது அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களில் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன் அவை குறித்த அனைத்துத் தவறான கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு அல்லது தேர்தல் செயல்முறைகள் மீதான உலகளாவிய நம்பிக்கையைக் குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மிகவும் வருந்தத்தக்கவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களை மதிப்பது மிக முக்கியமானது என்றும் இந்தியாவின் ஜனநாயகச் செயல்முறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காப்பது அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டுப் பொறுப்பு என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மிகப்பெரிய ECI முறைகேடு! தேர்தல் ஆணையர் பதவிக்கு நெருக்கடி.. ராஜினாமா செய்வாரா ஞானேஷ்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES