• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained: தேர்தல் ஆணையத்தில் வெடித்த மோதல் - Form 6 சர்ச்சையும்... விளக்கமும்...

Explained: தேர்தல் ஆணையத்தில் வெடித்த மோதல் - Form 6 சர்ச்சையும்... விளக்கமும்...

புதிய வாக்காளர் பதிவுக்கான Form 6 மற்றும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (SIR) விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களுக்குள் எழுந்த சர்ச்சை என்ன? தேர்தல் ஆணையம் அளித்த முழுமையான விளக்கம் என்ன? உள்ளிட்டவற்றை விரிவாக இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 24, 2026, 23:45 IST|Updated: Sep 24, 2026, 23:54 IST
joinshare
Explained: தேர்தல் ஆணையத்தில் வெடித்த மோதல் - Form 6 சர்ச்சையும்... விளக்கமும்...
Image Credit: Election Commission Rift Explained | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

2

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

3

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

4

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

5

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாட்டின் ஜனநாயகத் தூண்களில தலையாய ஒன்றாக கருதப்படும் நிலையில், சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், மற்ற இரண்டு ஆணையர்களுக்கும் இடையிலான கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | வெளிச்சத்திற்கு வந்த SIR குளறுபடிகள்.. தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது?

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறைகள் குறித்த தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரண்டு தேர்தல் ஆணையர்களும் கடந்த 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பை பதிவு செய்து கடிதம் எழுதியதாக The Indian Express நேற்றைய தினம் (செப். 23) செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்பாக, முதல்முறை வாக்காளர்களைச் சேர்க்கும் படிவம் 6 மற்றும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட புதிய நிபந்தனைகளே இந்த விவாதங்களின் மையப்புள்ளியாக உள்ளன. இந்த விவகாரத்தின் பின்னணி, இதில் இருக்கும் சட்ட ரீதியான முரண்கள், ஆணையர்கள் முன்வைத்த ஆட்சேபனைகள் மற்றஉம் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அதிகாரப்பூவ் விளக்கங்கள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.

சர்ச்சையின் பின்னணி என்ன?

இந்தியாவின் முதல்முறை வாக்காளராகப் பதிவு செய்ய படிவம் 6 (Form 6) பூர்த்தி செய்யப்பட வேண்டும். வழக்கமாக இதில் பெயர், முகவரி, வயதுச் சான்று போன்ற அடிப்படைத் தகவல்கள் மட்டுமே கோரப்படும்.

புதிய நிபந்தனை: புதிய வாக்காளர் அல்லது அவரது பெற்றோர், தாத்தா - பாட்டி (முன்னோர்) ஆகியோர் முந்தைய தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனரா என்ற தகவலைக் கேட்கும் பகுதி சேர்க்கப்பட்டது.

தொழில்நுட்பச் சிக்கல்: இந்தப் பிரிவு கட்டாயமில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இணையவழி விண்ணப்பத்தில் இதற்குப் பதிலளிக்காமல் படிவத்தைச் சமர்பிக்க முடியாத நிலை உருவானது.

கால இடைவெளி: பல மாநிலங்களில் கடைசி தீவிர வாக்காளர் திருத்தம் 2000-களின் தொடக்கத்திலேயே நடைபெற்றது என்பதால், புதிய விண்ணப்பதாரர்களுக்கு இந்த தகவலைக் கண்டறிவதில் நடைமுறைச் சிரமம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையர்கள் முன்வைத்த வாதங்கள்

The Indian Express வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 10 மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான பல்வேறு முடிவுகளுக்கு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை தங்களின் முறையான ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர்.

சட்டமீறல்: வாக்காளர் பதிவு விதிகள், 1960-இன் படி, படிவம் 6 என்பது மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே திருத்தப்படக்கூடிய சட்டப்பூர்வ ஆவணமாகும். அமைச்சகத்தின் முறையான அறிவிக்கையின்றி, தேர்தல் ஆணையத்தின் நிர்வாக உத்தரவுகள் மூலம் மட்டுமே படிவத்தின் தன்மையை மாற்ற முடியாது என்று விவேக் ஜோஷி எச்சரித்துள்ளார்.

அதிகார வரம்பை மீறிய செயல்: இணையதளத்தில் உடனடியாகச் சேர்க்கப்பட்ட இந்த வம்சாவளித் தகுதி நிபந்தனை அங்கீகாரமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்றும் இதனை உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சுக்பீர் சிங் சாந்து கடுமையாக வலியுறுத்தினார்.

வாக்குரிமை பறிபோகும் அபாயம்: முன்னோர்களின் பழைய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், லட்சக்கணக்கான இளைஞர்களும் ஏழை எளிய மக்களும் முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் இணையும் அடிப்படை ஜனநாயக உரிமையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

மேலும் படிக்க | ஸ்டாலின், மம்தா தேர்தல் தோல்வி... பின்னணியில் SIR...? - கேள்வி எழுப்பும் CJP

தேர்தல் ஆணையத்தின் விரிவான விளக்கம்

தற்போது எழுந்திருக்கும் இந்த சர்ச்சைகளுக்கும், முரண்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் India Today ஊடகத்திடம் விளக்கம் அளித்துள்ளது. அதன் சுருக்கம் இதோ:

அசல் படிவத்தில் திருத்தமில்லை

சட்டப்பூர்வ படிவம் 6-இல் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும்; பெற்றோர் மற்றும் முன்னோரின் வாக்காளர் இணைப்பு விவரங்கள் 'கூடுதல் சுயவிவரப் படிவமாக' மட்டுமே கோரப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Annexure D நடைமுறை

பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு 2025ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.

அதன்படி, புதிய வாக்காளர்களுக்கான படிவும் 6 மற்றும் தொகுதி மாற்றுபவர்களுக்கான படிவம் 8 ஆகியவற்றுடன் கூடுதல் உறுதிமொழிப் படிவமாக 'Annexure D' இணைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் விளக்கி உள்ளது.

ஆணையத்தின் நோக்கம்

கள்ள வாக்குகள், இரட்டைப் பதிவுகள், போலி வாக்காளர்களை முற்றிலுமாக ஒழித்து, மிகத் துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே இதன்நோக்கம் என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Press Note pic.twitter.com/xIQvXHqMSt

— Election Commission of India (@ECISVEEP) September 23, 2026

அதிக கவனம் பெறுவது ஏன்...?

சுயாட்சி மீதான சந்தேகம்

தேர்தல் ஆணையம் எப்போதும் ஒருமித்த கருத்துடனே முடிவுகளை எடுக்கும் பாரம்பரியத்தைக் கொண்டது. ஆனால், கடந்த 10 மாதங்களில் 14 முறை கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நிர்வாக வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

மறைமுகச் சுமை

அசல் படிவத்தை திருத்தாமல் 'Annexure D' என்ற பெயரில் கூடுதல் படிவத்தை இணைத்திருந்தாலும், நடைமுறையில் ஒரு புதிய வாக்காளருக்கு அது தேவையற்ற ஆவணச் சுமையையும், தடைகளையும் உருவாக்குகிறது என்பது சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

வாக்காளர் விழிப்புணர்வு

ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்குரிமையைப் பெறுவதற்கு, தற்போதைய தலைமுறையினர் தங்களின் 20 ஆண்டுகாலப் பழைய குடும்ப வாக்காளர் வரலாற்றை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது தேர்தல் பங்கேற்பைக் குறைக்கலாம் என்ற ஜனநாயக அச்சுறுத்தல் சார்ந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கட்டுரையின் சுருக்கம்

1. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய விளக்கம்

Form 6-ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. SIR தொடர்பான பெற்றோர்/முன்னோர் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவலுக்காக Annexure D என்ற கூடுதல் அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

2. எழுந்துள்ள எதிர்ப்பு

இந்த கூடுதல் நடைமுறையை Form 6 உடன் இணைக்கும் போது தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவோ என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.

எனவே, இது வெறுமனே Form 6 மாற்றப்பட்டதா இல்லையா? என்ற தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடைமுறை, SIR-கீழ் கேட்கப்படும் கூடுதல் தகவல்கள், அவற்றுக்கான சட்ட அடிப்படை ஆகிய மூன்றையும் ஒன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | 2024 மக்களவை தேர்தலே முறைகேடாக நடந்தது... ராகுல் காந்தி சொல்லிய முக்கிய பாயிண்ட்ஸ்

Add Zee News as a Preferred Source
TAGS:
India