• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explainer: 16 மணி நேரம் ‘NO Salary’.. மன உளைச்சலில் தவிக்கும் இந்தியர்கள்! ஷாக் ரிப்போர்ட்

Explainer: 16 மணி நேரம் ‘NO Salary’.. மன உளைச்சலில் தவிக்கும் இந்தியர்கள்! ஷாக் ரிப்போர்ட்

ADP ஆய்வின்படி, இந்தியாவில் 24% தொழிலாளர்கள் வாரத்திற்கு 16 மணி நேரத்திற்கும் மேலாக ஊதியமின்றி கூடுதல் வேலை செய்வதாக தெரிவித்துள்ள நிலையில், நீண்ட வேலை நேரம் உற்பத்தித்திறன் மட்டுமின்றி மன அழுத்தம் மற்றும் Work-Life Balance-ஐயும் பாதிக்கிறது.

Written ByR Balaji
Published: Sep 07, 2026, 13:39 IST|Updated: Sep 07, 2026, 13:44 IST
joinshare
Explainer: 16 மணி நேரம் ‘NO Salary’.. மன உளைச்சலில் தவிக்கும் இந்தியர்கள்! ஷாக் ரிப்போர்ட்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உலகில் பலரும் வேலை நேரத்தை தாண்டி அலுவலக வேலைகளை பார்த்து வருகின்றனர். வேலை நேரம் முடிந்துவிட்டது என்று அலுவலகத்தில் இருந்து கிளம்பினாலும், வீட்டுக்கு சென்ற பிறகும் இ-மெயில் செக் செய்வது, அலுவலக அழைப்பில் பங்கேற்பது, முடிக்கப்படாத பணிகளை வீட்டில் இருந்து செய்வது என பலரின் வேலை நேரம் நீள்கிறது. இந்த நிலையில், ஊதிய நேரத்திற்கு அப்பால் வேலை செய்பவர்களை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை ADP Research-ன் People at Work 2026 ஆய்வு வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் 24 சதவீத தொழிலாளர்கள் வாரத்திற்கு 16 மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஊதியமின்று கூடுதல் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆய்வில் இடம்பெற்ற 36 சந்தைகளில் இதுவே அதிகபட்ச விகிதமாகும். மேலும், 40 சதவீத இந்திய தொழிலாளர்கள் வாரத்திற்கு 6 முதல் 15 மணி நேரம் வரை ஊதியமின்றி வேலை செய்வதாக கூறியுள்ளனர்.

அதாவது, ஆய்வில் பங்கேற்ற இந்திய தொழிலாளர்களில் சுமார் 64 சதவீதம் பேர் வாரத்திற்கு குறைந்தது 6 மணி நேரம் கூடுதலாக ஊதியமின்றி வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இங்கு Unpaid Work என்று குறிப்பிடப்படுவது, ஒருவர் பெறும் மாத சம்பள நேரத்திற்கு அப்பால் செய்யும் வேலையாகும். உதாரணமாக, மதிய உணவு நேரத்திலும் அலுவலக வேலையை தொடர்வது, அலுவலக நேரம் முடிந்த பிறகும் பணிகளை செய்வது அல்லது வீட்டுக்கு சென்ற பிறகு வேலை தொடர்பான பணிகளில் ஈடுபடுவது போன்றவை இதில் அடங்கும்.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஏன் அதிகமாக உள்ளது என்ற கேள்வி எழலாம். இதை புரிந்துக்கொள்ள இந்தியாவை மற்ற நாடுகளின் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. உலக அளவில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் வாரத்திற்கு 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவே ஊதியமின்றி கூடுதல் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் 6 முதல் 15 மணி நேரமும், 12 சதவீதம் பேர் 16 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் ஊதியமின்றி வேலை செய்வதாக கூறியுள்ளனர்.

ஆனால் இந்தியாவில் 16 மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஊதியமின்றி வேலை செய்வதாக கூறியவர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது. இந்த பட்டியலில் துருக்கி 23 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும் ஆஸ்திரியா 21 சதவீதத்துடனும், அமெரிக்கா 20 சதவீதத்துடனும் உள்ளன.

மறுபுறம், செக் குடியரசில் வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே வாரத்திற்கு 16 மணி நேரத்திற்கும் அதிகமாக ஊதியமின்றி வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர். சீனா, தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 6 சதவீதத்துடன் உள்ளது.

அதேபோல், வேலை செய்யும் பதவிக்கும், சம்பளம் இல்லாமல் கூடுதல் வேலை செய்யும் நேரத்திற்கு தொடர்பு இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் வேலை நேரத்துக்கு பிறகும் பணிகளை தொடர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேல்நிலை மேலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பாதி பேர் வாரத்திற்கு குறைந்தது 6 மணி நேரம் சம்பளமின்றில் கூடுதல் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 20 சதவீதம் பேர் வாரத்திற்கு 16 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கூடுதல் வேலை செய்வதாக கூறியுள்ளனர். அதேசமயம், தனிப்பட்ட பங்களிப்பாளர்களில் 26 சதவீதம் பேர் குறைந்தது 6 மணி நேரமும், 9 சதவீதம் பேர் 16 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் ஊதியமின்றி வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், நிறுவனத்தில் பொறுப்பு அதிகரிக்கும்போது வேலை நேரத்துக்கு அப்பால் செய்ய வேண்டிய பணிகளும் அதிகரிக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

வீட்டில் இருந்தும் வேலை... Remote Work காரணமா?

அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வதைவிட வீட்டில் இருந்தே வேலை செய்வது வசதியாக இருக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் வேலைக்கும் தனிப்பட்ட நேரத்துக்கும் இடையிலான எல்லை மங்கும்போது, கூடுதல் வேலை நேரமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வில், Remote Work செய்யும் ஊழியர்களில் 13 சதவீதம் பேர் வாரத்திற்கு 16 மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஊதியமின்றி வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர். Hybrid மற்றும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்பவர்களிடம் இந்த விகிதம் 12 சதவீதமாக இருந்தது.

இதனால், வீட்டில் இருந்து வேலை செய்வதே அதிகப்படியான வேலை நேரத்துக்கு காரணம் என்று நேரடியாக கூற முடியாது. ஆனால் அலுவலக நேரம் முடிந்த பிறகும் வேலை தொடர்வது, வீட்டுக்கும் வேலைக்கும் இடையிலான எல்லையை பாதிக்கக்கூடும் என்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன.

அதிக நேரம் வேலை செய்தால் Productivity அதிகரிக்குமா?

பொதுவாக, அதிக நேரம் வேலை செய்தால் அதிகமான பணிகளை முடிக்க முடியும் என்பதுதான் நம்முடைய எண்ணமாக இருக்கும். ஆனால் கூடுதல் வேலை நேரம் அதிகரித்தாலே உற்பத்தித்திறனும் அதிகரிக்கும் என்று கூற முடியாது என ADP ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஊதியமின்றி வேலை செய்யும் நேரம் அதிகரித்தவர்களிடம், தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக வேலை செய்ய முடியவில்லை என்ற உணர்வும் அதிகமாக இருந்தது. குறிப்பாக மூத்த மேலாளர்கள் மற்றும் உயர் நிர்வாகிகளிடம் இந்த போக்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அதாவது, ஒருவர் நீண்ட நேரம் வேலை செய்வது என்பது அவர் அதிக உற்பத்தித்திறனுடன் செயல்படுகிறார் என்பதற்கான உறுதியான அறிகுறி அல்ல.

அதிக வேலை பளு மன அழுத்தத்தை அதிகரிக்கிறதா?

கூடுதல் வேலை நேரம் அதிகரிக்கும்போது மற்றொரு பிரச்சினையும் உருவாகிறது. அது Stress.

வாரத்திற்கு அதிக நேரம் ஊதியமின்றி வேலை செய்பவர்கள், வேலையில் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வதாக கூறும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. அதேபோல், வேலையில் முழுமையாக திருப்தியாகவோ, சிறப்பாக செயல்படுவதாகவோ உணராத நிலையும் அதிகமாக காணப்பட்டது.

இதற்கு மாறாக, அதிக நேரம் வேலை செய்பவர்களில் சிலர் தங்களது வேலையில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும், தங்களது பணிக்கு ஒரு அர்த்தம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு உள்ளது. ஒருவர் தனது வேலையை மிகவும் விரும்பி அதில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கலாம். அதே நேரத்தில், அந்த வேலையே அவருக்கு அதிக மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம்.

அப்படியானால் அதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா?

இதற்கு இந்த ஆய்வு நேரடியாக “ஆம்” அல்லது “இல்லை” என்று பதில் அளிக்கவில்லை. ஆனால் நீண்ட நேரம் ஊதியமின்றி வேலை செய்வதற்கும் மன அழுத்தம், குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் வேலையை மாற்ற நினைப்பது போன்றவற்றுக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வு காட்டுகிறது.

குறிப்பாக, வாரத்திற்கு 16 மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஊதியமின்றி வேலை செய்பவர்கள் வேறு வேலை தேடுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. இந்த போக்கு உயர் பதவியில் இருக்கும் நிர்வாகிகளிடமும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இதனால், “அதிக நேரம் வேலை செய்வது = சிறந்த ஊழியர்” என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

வேலை நேரத்துக்கு அப்பால் அவ்வப்போது சில பணிகளை செய்வது வேறு; தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பல மணி நேரம் ஊதியமின்றி வேலை செய்வது வேறு. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை நிறுவனங்களும் ஊழியர்களும் கவனிக்க வேண்டியது அவசியம்.

இந்த ஆய்வு நமக்கு சொல்வது என்ன?

மொத்தத்தில், இந்த ஆய்வு இந்தியாவில் வேலை நேரம் மற்றும் Work-Life Balance குறித்து ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு ஊழியர் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதைவிட, அந்த வேலை நேரத்தில் அவர் எவ்வளவு திறமையாகவும், மன அழுத்தமின்றியும் பணியாற்றுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, வேலை நேரம் முடிந்த பிறகும் தொடர்ச்சியாக இ-மெயில், தொலைபேசி அழைப்புகள் மற்றும் அலுவலக பணிகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டால், அது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். எனவே, அதிக நேரம் வேலை செய்வதை சாதனையாக பார்ப்பதைவிட, குறிப்பிட்ட வேலை நேரத்திற்குள் பணியை திறம்பட முடித்து, ஊழியர்களின் தனிப்பட்ட நேரத்துக்கும் மதிப்பு கொடுப்பதே நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்கும் என்பதையே இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India