• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : மேகதாது அணை விவகாரம்! காங்கிரஸ் டபுள் கேம் ஆடுகிறதா? தலைவர்கள் சொல்வது என்ன?

Explained : மேகதாது அணை விவகாரம்! காங்கிரஸ் டபுள் கேம் ஆடுகிறதா? தலைவர்கள் சொல்வது என்ன?

கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை மற்றும் நீர்மின் நிலையம் கட்ட முயற்சிப்பதும், அதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

Written ByYuvashree M
Published: Nov 15, 2026, 15:21 IST|Updated: Nov 15, 2026, 15:27 IST
joinshare
Explained : மேகதாது அணை விவகாரம்! காங்கிரஸ் டபுள் கேம் ஆடுகிறதா? தலைவர்கள் சொல்வது என்ன?
Image Credit: Megadatu | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடகா மிக நீண்ட காலமாக போராடி வரும் நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், மேகதாது கட்டுவது எங்கள் உரிமை என்று பேசியது, தமிழ்நாட்டில் கடும் பிரளயத்தை உண்டு செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

மேகதாது விவகாரம்:

கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை மற்றும் நீர்மின் நிலையம் கட்ட முயற்சிப்பதும், அதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணை வழியாக வரக்கூடிய காவிரி நீரின் அளவு கடுமையாக குறையும். இதனால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயமும் மக்களின் குடிநீரும் பெரிதும் பாதிக்கப்படும்.

கர்நாடகாவின் வாதமாக இருப்பது என்னவென்றால், பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவைக்காகவும் நீர்மின் உற்பத்திக்கு மட்டுமே இந்த தண்ணீர் பயன்படுத்தப்படும் என்றும், இது தங்களது எல்லைக்குட்பட்டது என்றும், கர்நாடக அரசு வாதிடுகிறது.

இந்த திட்டத்தால் காடுகள் மற்றும் பல லட்சம் மரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், மத்திய அரசின் இறுதி அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது என்பதால், இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து அரசியல் மற்றும் சட்ட மோதல்கள் நீடித்து வருகின்றன.

சர்ச்சையை கிளப்பிய டி.கே.சிவகுமாரின் பேச்சு..!

சமீபத்தில் கர்நாடகாவின் முதலமைச்சரான டி.கே.சிவகுமார், மேகதாது அணை கட்டுவது குறித்து பேசியிருக்கிறார். அப்போது, மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது எங்களின் உரிமை மற்றும் கடமை என்றும், இதிலிருந்து எந்த நிலையிலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். இது, தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை அவர், மைசூரில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், காவேரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாது அணை கட்ட வேண்டும் என டி.கே. சிவகுமார் மீண்டும் அழைப்பு விடுத்ததாக கருதப்படுகிறது.

மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தமிழக தலைவர்களின் அவர் பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய போது அவர், தமிழகத்தில் நடப்பது வெறும் அரசியல் மட்டுமே என கூறிய அவர், எதிர்ப்பதற்கு பதிலாக தமிழகம் ஒரு குழுவை அனுப்பட்டும், நான் அவர்களை அணை கட்டும் இடத்திற்கு அழைத்து சென்று, இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என விளக்குகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177 டி.எம்.சி தண்ணீரை வழங்குவதற்கு கர்நாடகா உறுதி செய்ய்யும் என்றும் இது முழுக்க முழுக்க கர்நாடக நிலத்தில் கட்டப்படும் சொந்த திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்திடத்திற்கு தேவையான வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்த அவர், அனுமதி கிடைத்த உடனேயே பணிகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்தார்.

மாணிக்கம் தாகூர் சொன்னது என்ன?

தமிழக காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி, மேகதாது திட்டத்திற்கு மத்தியாரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும், அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டின் நலன் மற்றும் நம்முடைய மாநில விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என முழக்கமிட்ட அவர், மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் சிவகுமாரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார், மாணிக்கம் தாகூர்.

மேலும் படிக்க | ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு... பாகிஸ்தான் நபர்களுக்கு தொடர்பு? - நடந்தது என்ன?

வன்னி அரசு கூறுவது என்ன?

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, செய்தியாளர்களிடம் மேகதாது அணை பிரச்சனை குறித்து பேசினார். அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்றும், கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் vs காங்கிரஸ்

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் அதே சமத்தில், தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் தவெக அரசுடன் காங்கரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது. இந்த மேகதாது விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வந்தாலும், அவர்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்களா, அல்லது தமிழ்நாட்டை சார்ந்து செயல்படுவார்களா எனும் கேள்வியும் உருவாகி இருக்கிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டிருக்கும் பதிவில் அவர், “டி.கே.சிவகுமர் மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை', - 'அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே ஒரு வேற்றுமையை உண்டாக்கும் விதமாக ஒரு மாநில முதலமைச்சர் இவ்வாறு பேசி வருவது கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருக்கிறார். இவரைத்தொடர்ந்து, பல்வேறு தலைவர்கள் அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? அவை உண்மையிலேயே காற்று மாசை குறைக்குமா? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer