நாட்டின் பெரு நகரங்களில் பொது போக்குவரத்து என்பது மிக முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றாகும். அதிலும் மெட்ரோ சேவை தற்போது அதிநவீன மற்றும் அதிவிரைவு சேவையாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், புறநகர் ரயில் சேவையும் பெருநகரங்களில் தவிர்க்க முடியாது ஒன்று. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் புறநகர் ரயில் சேவை இயங்கி வருகிறது.
பிற நகரங்களை காட்டிலும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ரயில் சேவை என்பது மும்பை புறநகர் ரயில்தான். மும்பை புறநகர் ரயில்வே இணையத்தளத்தில் உள்ள தகவலின்படி, குறைந்தபட்சம் தினமும் 70-80 லட்சம் பயணிகள் இதில் பயணிக்கின்றனர். சுமார் 400 கி.மீ., தூரத்திற்கு தினமும் 3 ஆயிரம் ரயில் சேவைகளுக்கும் மேல் இயக்கப்படுகின்றன. மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளது.
அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த மும்பை புறநகர் ரயிலில் முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. அதாவது, மும்பையில் முதல்முறையாக ஏசி அல்லாத புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட இருப்பதாக கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று Times of India பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதையொட்டி, சென்னையின் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) 12 பெட்டிகளை கொண்ட ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அன்று நடந்த பயங்கர விபத்துதான் புறநகர் ரயில் பெட்டிகளில் கதவுகளை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியது. எதிர் திசைகளில் சென்றுகொண்டிருந்த 2 ரயில்களில், பயணிகள் பலர் வாசலுக்கு வெளியே தொங்கியபடி சென்றுள்ளனர், அப்போது ரயில்கள் ஒன்றுக்கு ஒன்று எதிர்திசையில் செல்லும்போது 5 பயணிகள் தண்டவாளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
The Indian Express பத்திரிகையில் வெளியிடப்பட்ட அரசு ரயில்வே காவல்துறை தரவுகளின்படி: