SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி மின்சார ரயில்களில் ஆட்டோமெட்டிக் கதவுகள்... உயிரிழப்புகளை தடுக்க சூப்பர் பிளான்

மும்பை ஏசி அல்லாத புறநகர் ரயில்களில் முதல்முறையாக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளன. சென்னை ஐசிஎப் தயாரித்துள்ள 12 பெட்டிகள் கொண்ட ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் விபத்துகளை தடுக்கும் புதிய வசதிகள் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 11, 2026, 09:30 AM IST | Updated: Nov 11, 2026, 09:35 AM IST
Image Credit: Mumbai Sub Urban Railway | Image Source: X
Join

நாட்டின் பெரு நகரங்களில் பொது போக்குவரத்து என்பது மிக முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றாகும். அதிலும் மெட்ரோ சேவை தற்போது அதிநவீன மற்றும் அதிவிரைவு சேவையாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், புறநகர் ரயில் சேவையும் பெருநகரங்களில் தவிர்க்க முடியாது ஒன்று. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் புறநகர் ரயில் சேவை இயங்கி வருகிறது.

மேலும் படிக்க | பிரதமர் பதவிக்கு OK சொன்ன சோனிய காந்தி.. கோபத்தில் ராகுல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை

முக்கியத்துவம் வாய்ந்த மும்பை புறநகர் ரயில்

பிற நகரங்களை காட்டிலும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ரயில் சேவை என்பது மும்பை புறநகர் ரயில்தான். மும்பை புறநகர் ரயில்வே இணையத்தளத்தில் உள்ள தகவலின்படி, குறைந்தபட்சம் தினமும் 70-80 லட்சம் பயணிகள் இதில் பயணிக்கின்றனர். சுமார் 400 கி.மீ., தூரத்திற்கு தினமும் 3 ஆயிரம் ரயில் சேவைகளுக்கும் மேல் இயக்கப்படுகின்றன. மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளது.

தானியங்கி கதவுகளுடன் ரயில் பெட்டி

அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த மும்பை புறநகர் ரயிலில் முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. அதாவது, மும்பையில் முதல்முறையாக ஏசி அல்லாத புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட இருப்பதாக கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று Times of India பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதையொட்டி, சென்னையின் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) 12 பெட்டிகளை கொண்ட ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025இல் நடந்த சம்பவம்

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அன்று நடந்த பயங்கர விபத்துதான் புறநகர் ரயில் பெட்டிகளில் கதவுகளை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியது. எதிர் திசைகளில் சென்றுகொண்டிருந்த 2 ரயில்களில், பயணிகள் பலர் வாசலுக்கு வெளியே தொங்கியபடி சென்றுள்ளனர், அப்போது ரயில்கள் ஒன்றுக்கு ஒன்று எதிர்திசையில் செல்லும்போது 5 பயணிகள் தண்டவாளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க | 60 நாளில் ரூ.9 லட்சம்.. தூங்கியே சம்பாதித்த மும்பை பெண்.. எப்படி தெரியுமா?

ரயிலில் ஏற்படும் உயிரிழப்புகள்

The Indian Express பத்திரிகையில் வெளியிடப்பட்ட அரசு ரயில்வே காவல்துறை தரவுகளின்படி:

காற்றோட்டம் எப்படி இருக்கும்...?

மேலும் படிக்க | காங்கிரஸுக்கு காத்திருக்கும் ஆப்பு! வரலாறு காணாத அளவில் குறைந்த நன்கொடை.. என்ன காரணம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES