Odisha DA Hike: மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒரு முக்கியமான சம்பள கூறாக கருதப்படுகின்றது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படுகின்றது. அந்த வகையில், ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) மூன்று சதவீதம் உயர்த்துவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) தற்போது 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும், கூடுதல் அகவிலைப்படிக்கான தொகை நவம்பர் மாத ஊதியத்துடன் சேர்த்து ரொக்கமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
STORY | Odisha govt hikes Dearness Allowance by 3 per cent Odisha Chief Minister Mohan Charan Majhi on Tuesday announced a three per cent hike in Dearness Allowance (DA) for state government employees. READ: https://t.co/lxcrhtrubl https://t.co/MjScn1dbAH
— Press Trust of India (@PTI_News) November 17, 2026
மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (Dearness Relief) மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவில் சுமார் 8.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த உயர்வால் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய ஊழியர்கள் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலனையும் அரசு முழுமையாகக் கருத்தில் கொண்டுள்ளது. மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியையும் (DA) 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இவர்களுக்கும் உயர்த்தப்பட்ட தொகை நவம்பர் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஒடிசாவில் சுமார் 8.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்து வரும் பணவீக்கச் சூழலில், இந்த உயர்வு ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக அமையும் என கருதப்படுகிறது.
கர்நாடக அரசு, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 15.75 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
சமீபத்தில், குஜராத் அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது. இது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கிடைக்கும் ஒரு முக்கியமான பலனாகும். இந்த முடிவு மாநிலத்தில் 9.69 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவும். இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அருணாச்சலப் பிரதேச அரசும் தனது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி, அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விகிதம் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 63% ஆக அதிகரித்தன.