SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திடீரென அதிகரித்த அகவிலைப்படி: ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கு பரிசு

Odisha DA Hike: ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) மூன்று சதவீதம் உயர்த்துவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 17, 2026, 16:53 IST | Updated: Nov 17, 2026, 16:58 IST
Image Credit: Representative / Odisha DA Hike
Join

Odisha DA Hike: மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒரு முக்கியமான சம்பள கூறாக கருதப்படுகின்றது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படுகின்றது. அந்த வகையில், ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) மூன்று சதவீதம் உயர்த்துவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

அகவிலைப்படியை உயர்த்திய ஒடிசா அரசு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) தற்போது 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும், கூடுதல் அகவிலைப்படிக்கான தொகை நவம்பர் மாத ஊதியத்துடன் சேர்த்து ரொக்கமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (Dearness Relief) மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவில் சுமார் 8.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த உயர்வால் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | EPS மாத ஓய்வூதியத்தில் 3 மடங்கு ஏற்றமா? நவம்பர் 19 முக்கிய EPFO CBT கூட்டம்

ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் நிவாரணம்

தற்போதைய ஊழியர்கள் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலனையும் அரசு முழுமையாகக் கருத்தில் கொண்டுள்ளது. மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியையும் (DA) 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இவர்களுக்கும் உயர்த்தப்பட்ட தொகை நவம்பர் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும்.

இந்த நடவடிக்கையின் மூலம் ஒடிசாவில் சுமார் 8.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்து வரும் பணவீக்கச் சூழலில், இந்த உயர்வு ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக அமையும் என கருதப்படுகிறது.

கர்நாடக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

கர்நாடக அரசு, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 15.75 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.

குஜராத் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு

சமீபத்தில், குஜராத் அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது. இது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கிடைக்கும் ஒரு முக்கியமான பலனாகும். இந்த முடிவு மாநிலத்தில் 9.69 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவும். இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும்.

மேலும் படிக்க | பல பில்லியன் டாலர்களை இழக்கும் NVIDIA... ஆனால் இந்தியாவுக்கு ஜாக்பாட்? -காரணம் இது தான்

அருணாச்சலப் பிரதேச அரசும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது

இதற்கிடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அருணாச்சலப் பிரதேச அரசும் தனது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி, அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விகிதம் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

மத்திய அரசு ஊழியர்கள்

அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 63% ஆக அதிகரித்தன.

மேலும் படிக்க | மாசம் மாசம் கேரண்டி பணம்.. சீனியர் சிட்டிசன்கள் தவறவிடக்கூடாத 5 சிறந்த அரசு திட்டங்கள்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES