• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /பிஎம் கிசான் 24வது தவணை: விவசாயிகள் அறிந்திருக்க வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்

பிஎம் கிசான் 24வது தவணை: விவசாயிகள் அறிந்திருக்க வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்

PM Kisan 24th Installment: பிரதம மந்திரி கிசான் விகாஸ் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயடனைகின்றனர். தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற கணக்கில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 02, 2026, 03:46 PM IST|Updated: Oct 02, 2026, 03:53 PM IST
joinshare
பிஎம் கிசான் 24வது தவணை: விவசாயிகள் அறிந்திருக்க வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்
Image Credit: Representative / PM Kisan 24th Installment

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

2

சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

4

செவ்வாய் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

5

Travel பிரியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.400ல் 5 இடத்தை சுற்றி பார்க்கலாம்..யூஸ் பண்ணிக்கோங்க..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

PM Kisan 24th Installment: விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 24-வது தவணைக்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அது நவம்பர் 30-ஆம் தேதிக்கு முன்னதாகவே வழங்கப்படக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) மூலம் ஏராளமான விவசாயிகள் பயடனைகின்றனர். தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற கணக்கில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.

இதுவரை 23 தவணைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 24வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 23 தவணைகளில், நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) முறை மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ₹4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிஎம் கிசான் இணையதளத்தில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தை காந்தி புறக்கணித்தது ஏன்? இதுதான் காரணமா..?

பிஎம் கிசான் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ள நான்கு முக்கிய மாற்றங்கள்:

1. முழுமையற்ற தகவல்களைச் சரிசெய்தல்:

  • இதைச் செய்ய PM Kisan இணையதளத்திற்குச் சென்று, வலதுபுறத்தில் உள்ள “Update Missing Information” (விடுபட்ட தகவல்களைப் புதுப்பித்தல்) என்ற பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். 
  • இந்த வசதி முழுமையற்ற விவரங்களைக் கொண்ட விவசாயிகளுக்கானது. 
  • அந்தப் பெட்டியைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் அல்லது பதிவு எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை (captcha) பூர்த்தி செய்து, விடுபட்ட தகவல்களைப் புதுப்பிக்கலாம்.

2. மொபைல் எண்ணைப் புதுப்பித்தல்:

  • உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, இரண்டாவது வரிசையில் உள்ள இரண்டாவது பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் பதிவு அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை பூர்த்தி செய்யவும்.
  • அடுத்து, ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.

3. தகுதியற்ற பயனாளிகளுக்கான ஆன்லைன் பணத்தைத் திரும்பச் செலுத்துதல்:

  • நீங்கள் PM Kisan சலுகைகளைப் பெறத் தகுதியற்றவராக இருந்தும் பணம் பெற்றுக்கொண்டிருந்தால், அதை திருப்பிக் கொடுக்க, “Online Refund” (ஆன்லைன் பணத்தைத் திரும்பச் செலுத்துதல்) பகுதிக்குச் செல்லவும். 
  • உங்கள் பதிவு அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை பூர்த்தி செய்து, OTP-யைப் பெற்று, தவறாகப் பெறப்பட்ட பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மேலும் படிக்க | Explainer: ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்'.... 8வது ஊதியக் குழுவிடம் முக்கிய கோரிக்கை - OROP என்றால் என்ன?

4. உதவிக்கு அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுதல்:

  • இந்த வசதியைப் பெற, பிஎம் கிசான் இணையதளத்தின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, வலதுபுறத்தில் உள்ள “Search your Point of Contact (POC)” (தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரியைத் தேடுதல்) என்பதைக் கிளிக் செய்யவும். 
  • அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்கு 'State Nodal Contact Details' (மாநில அளவிலான தொடர்பு விவரங்கள்) பகுதியைப் பார்வையிடவும். 
  • உங்கள் மாநிலம் மற்றும் மாவட்ட விவரங்களை உள்ளிட்டு, உதவிக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரிகளின் விவரங்களைப் பெறலாம். 
  • உதவிக்கு, அங்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணபிக்க, விவசாயிகள் தங்கள் ஆதார் எண், மொபைல் எண், வங்கிக் கணக்கு எண், நில ஆவணங்கள் மற்றும் பிற விவரங்களை வழங்க வேண்டும். விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதுடன், தங்கள் விவசாய நிலத்திற்கான பதிவையும் முழுமையாகச் செய்திருக்க வேண்டும்.

2019-க்கு முந்தைய நிலப் பதிவு செல்லுபடியாகும்

இந்தச் சலுகையைப் பெற, விவசாயிகளின் நிலம் 2019-ஆம் ஆண்டிற்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 2019-க்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகள் செல்லுபடியாகாது. அத்தகைய சூழலில், விவசாயிகள் வாரிசுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | விமான கடத்தல்..350 பேரை காப்பாற்றிய நீர்ஜா பற்றி தெரியுமா? 40 ஆண்டுக்கு பின் வரலாறு ரிபீட்..

Add Zee News as a Preferred Source
TAGS:
Govt Schemes