பிஎம் கிசான் 24வது தவணை: விவசாயிகள் அறிந்திருக்க வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்
PM Kisan 24th Installment: பிரதம மந்திரி கிசான் விகாஸ் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயடனைகின்றனர். தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற கணக்கில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
PM Kisan 24th Installment: விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 24-வது தவணைக்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அது நவம்பர் 30-ஆம் தேதிக்கு முன்னதாகவே வழங்கப்படக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) மூலம் ஏராளமான விவசாயிகள் பயடனைகின்றனர். தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற கணக்கில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
இதுவரை 23 தவணைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 24வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 23 தவணைகளில், நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) முறை மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ₹4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிஎம் கிசான் இணையதளத்தில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தை காந்தி புறக்கணித்தது ஏன்? இதுதான் காரணமா..?
பிஎம் கிசான் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ள நான்கு முக்கிய மாற்றங்கள்:
1. முழுமையற்ற தகவல்களைச் சரிசெய்தல்:
- இதைச் செய்ய PM Kisan இணையதளத்திற்குச் சென்று, வலதுபுறத்தில் உள்ள “Update Missing Information” (விடுபட்ட தகவல்களைப் புதுப்பித்தல்) என்ற பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்த வசதி முழுமையற்ற விவரங்களைக் கொண்ட விவசாயிகளுக்கானது.
- அந்தப் பெட்டியைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் அல்லது பதிவு எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை (captcha) பூர்த்தி செய்து, விடுபட்ட தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
2. மொபைல் எண்ணைப் புதுப்பித்தல்:
- உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, இரண்டாவது வரிசையில் உள்ள இரண்டாவது பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பதிவு அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை பூர்த்தி செய்யவும்.
- அடுத்து, ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
3. தகுதியற்ற பயனாளிகளுக்கான ஆன்லைன் பணத்தைத் திரும்பச் செலுத்துதல்:
- நீங்கள் PM Kisan சலுகைகளைப் பெறத் தகுதியற்றவராக இருந்தும் பணம் பெற்றுக்கொண்டிருந்தால், அதை திருப்பிக் கொடுக்க, “Online Refund” (ஆன்லைன் பணத்தைத் திரும்பச் செலுத்துதல்) பகுதிக்குச் செல்லவும்.
- உங்கள் பதிவு அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை பூர்த்தி செய்து, OTP-யைப் பெற்று, தவறாகப் பெறப்பட்ட பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
4. உதவிக்கு அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுதல்:
- இந்த வசதியைப் பெற, பிஎம் கிசான் இணையதளத்தின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, வலதுபுறத்தில் உள்ள “Search your Point of Contact (POC)” (தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரியைத் தேடுதல்) என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்கு 'State Nodal Contact Details' (மாநில அளவிலான தொடர்பு விவரங்கள்) பகுதியைப் பார்வையிடவும்.
- உங்கள் மாநிலம் மற்றும் மாவட்ட விவரங்களை உள்ளிட்டு, உதவிக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரிகளின் விவரங்களைப் பெறலாம்.
- உதவிக்கு, அங்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணபிக்க, விவசாயிகள் தங்கள் ஆதார் எண், மொபைல் எண், வங்கிக் கணக்கு எண், நில ஆவணங்கள் மற்றும் பிற விவரங்களை வழங்க வேண்டும். விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதுடன், தங்கள் விவசாய நிலத்திற்கான பதிவையும் முழுமையாகச் செய்திருக்க வேண்டும்.
2019-க்கு முந்தைய நிலப் பதிவு செல்லுபடியாகும்
இந்தச் சலுகையைப் பெற, விவசாயிகளின் நிலம் 2019-ஆம் ஆண்டிற்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 2019-க்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகள் செல்லுபடியாகாது. அத்தகைய சூழலில், விவசாயிகள் வாரிசுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.