SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிரதமரை சந்தித்த பள்ளி நண்பர்... சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை - என்ன மேட்டர்?

பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளி தோழர் ஒருவர், பிரதமர் இல்லத்தை அவரை நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதன் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Sep 13, 2026, 19:33 IST | Updated: Sep 13, 2026, 19:41 IST
Image Credit: Narendra Modi with his Ex Schoolmate Asgarali Vohra | Image Source : X
Join

குஜராத் மாநிவத்தன் வட்நகர் பகுதியில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் படித்தவர் அஸ்கரலி வோஹ்ரா (81). பிரதமர் மோடியின் பால்ய கால நண்பரான இவர் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அன்று பிரமதர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது மகாராஷ்டிராவில் உள்ள மீரா-பயந்தர் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலத் தகராறு குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் பால்ய கால நண்பர் அஸ்கரலி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க | Explainer: BRICS New Delhi Declaration என்றால் என்ன? உலக பொருளாதாரத்தில் என்ன தாக்கம்?

பிரதமர் மோடியிடம் அளித்த கடிதம்

பாஜக எம்எல்ஏவான நரேந்திர மேத்தாவுடன் தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தனது சொத்து அபகரித்துக்கொண்டதாக அஸ்கரலி குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி கடிதம் ஒன்றையும் பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் நண்பருக்கு என்ன பிரச்னை

பயந்தர் கிழக்கு பகுதியில் நவகர் சாலையில் சுமார் 2,810 சதுர மீட்டர் நிலத்தை 1989ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் வாங்கியதாக அஸ்கரலி தெரிவித்தார். அந்தச் சொத்தை தான் யாருக்கும் விற்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ அல்லது அதன் உரிமையை வேறு எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டில் சுயம் பில்டர்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து போலியான ஆவணங்கள தயாரிக்கப்பட்டு அவருக்குத் தெரியாமலேயே அந்த நிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது என அஸ்கரலி தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் தலையீடு

ஒரு பகுதி சுயம் பில்டர்ஸ் வசம் இருக்கிறது என்றும்; மற்றொரு பகுதி பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுடன் தொடர்புடைய 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஆவணங்களில் தவறாக காட்டுப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க | BRICS 2026: பிரதமர் மோடியின் டின்னரில் சீன அதிபர் பங்கேற்காதது ஏன்...?

அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அஸ்கரலி கேள்வி எழுப்பினார். தனது நில உரிமை ஆவணங்கள் இருந்தபோதிலும், மீரா-பயந்தர் மாநகராட்சியின் நகர திட்டமிட துறை அங்கு கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

11 ஆண்டுகளுக்கு பின் சிஐடி அறிக்கை

போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாக மாநகராட்சி வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் குற்றஞ்சாட்டினார். இந்த மோசடி தொடர்பாக 2015ஆம் ஆண்டிலேயே அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இருப்பினும் 11 ஆண்டுகளுக்கு, 2026ஆம் ஆண்டில்தான் சிஐடி அறிக்கையை சமர்பித்ததாகவும் அஸ்கரலி தெரிவித்தார். இந்த கால தாமதமும், வழக்கு கையாளப்பட்ட விதமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் சில அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அஸ்கரலி கூறினார்.

பிரதமரிடம் நீதி கேட்டு சந்திப்பு

மேலும் தனக்கு எவ்வித முன்னறிவிப்போ அல்லது தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்போ தரப்படவில்லை என்றும் 2025ஆம் ஆண்டில் தன் மீது எதிர்ப்புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் அஸ்கரலி தெரிவித்தார். காவல்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகளை பல ஆண்டுகளாக அணுகியும் தனக்கு நீதி கிடைக்காததால், அஸ்கரலி இந்த விவகாரத்தை தனது பள்ளி கால நண்பர் பிரதமர் மோடியிடம் கொண்டுசெல்ல முடிவெடுத்தார்.

தீவிரப்படுத்தப்படும் விசாரணை

பிரதமர் மோடியிடம் அளித்த கடிதத்தில் இந்த நிலத் தகராறு மற்றும் இதில் தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள், அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பிரமதரிடம் அஸ்கரலி நடத்திய சந்திப்பை தொடர்ந்து உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகள் இவ்விவகாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அன்று இதுகுறித்த விசாரணை நடத்தப்பட உள்ளதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Explained: BRICS 2026 'புதுடெல்லி பிரகடனம்' – உலக அரசியலில் என்ன மாற்றம் வரப்போகிறது?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES