• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained: BRICS 2026 'புதுடெல்லி பிரகடனம்' – உலக அரசியலில் என்ன மாற்றம் வரப்போகிறது?

Explained: BRICS 2026 'புதுடெல்லி பிரகடனம்' – உலக அரசியலில் என்ன மாற்றம் வரப்போகிறது?

பிரிக்ஸ் உச்சமாநாட்டில் உறுப்பினர் நாடுகளிடையே நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க 'புதுடெல்லி பிரகடனம்' ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதுடெல்லி பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் சர்வதேச அளவில் அது ஏற்படுத்தும் தாக்கங்களை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 12, 2026, 06:51 PM IST|Updated: Sep 12, 2026, 07:27 PM IST
joinshare
Explained: BRICS 2026 'புதுடெல்லி பிரகடனம்' – உலக அரசியலில் என்ன மாற்றம் வரப்போகிறது?
Image Credit: BRICS 2026 New Delhi Declaration | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

BRICS 2026 New Delhi Declaration Explained: இந்தியாவின் தலைமையில் புதுடெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு இன்றும் (செப். 12), நாளையும் (செப். 13) நடைபெறுகிறது. 

இந்தியா தலைமையில் இரு நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஈரான் உள்ளிட்ட 11 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வருகின்றனர்.

உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ள தெற்குலக நாடுகளுக்கு இந்தியா உதவும்" என்றார்.

அஞ்சல் தலைகள் வெளியீடு

பிரிக்ஸ் அமைப்பின் 20ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புதுடெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது இந்தியா இரண்டு நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டது.

Marking two decades of BRICS, India releases two Commemorative Postage Stamps during the 18th BRICS Summit in New Delhi.

The stamps celebrate the evolution of BRICS as a valuable platform for dialogue & cooperation and capture the priorities of India’s BRICS Chairship 2026 under… pic.twitter.com/toaMEzAc8P

— BRICS 2026 (@BricsIndia2026) September 12, 2026

இந்த அஞ்சல் தலைகள், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக பிரிக்ஸ் அமைப்பின் பரிணாம வளர்ச்சியைக் கொண்டாடுவதோடு, "மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக கட்டமைத்தல்" என்ற கருப்பொருளின் கீழ், 2026ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பின் முன்னுரிமைகளையும் சுட்டிக்காட்டுகின்றன.

வெளியிடப்பட்ட 'புதுடெல்லி பிரகடனம்'

புதுடெல்லியின் பாரத மண்டபத்தில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உறுப்பினர் நாடுகளிடையே நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க 'புதுடெல்லி பிரகடனம்' (New Delhi Declaration) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்கு ஆசிய போர், ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆதிக்கம் போன்ற சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 'புதுடெல்லி பிரகடனம்' உலக அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Sharing my concluding remarks during the BRICS Summit. pic.twitter.com/PNkEBxAD3O

— Narendra Modi (@narendramodi) September 12, 2026

அந்த வகையில், இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் புதுடெல்லி பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் சர்வதேச அளவில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த முழுமையான அலசலை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | Video | BRICS 2026: 'ஒரு போட்டோ ப்ளீஸ்..’ பிரதமர் மோடியுடன் போட்டோ எடுத்த வெளிநாட்டு அதிகாரிகளின் ஃபேன் மொமெண்ட்

1. போர்களுக்கு கண்டனம்: 'பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு'

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையிலான மோதல்கள், உக்ரைன் போர் எனப் பல்வேறு சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில் இந்த மாநாட்டின் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், புதுடெல்லி பிரகடனத்தில் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் பெயரையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல், தனிச்சச்சையான ராணுவத் தாக்குதல்களும் ஆக்கிரமிப்புகளும் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு சர்வதேசப் பிரச்னைக்கும் ராணுவ மோதல் தீர்வாகாது. மாறாக, தூதரகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி வழிகளிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்பதை பிரிக்ஸ் நாடுகள் திட்டவட்டமாக வலியுறுத்தி உள்ளன.

2. டாலர் ஆதிக்கத்திற்கு முடிவு

  • சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஏகபோக ஆதிக்கத்தைக் குறைப்பது (De-dollarisation) குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
  • உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகம்: பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி - ஏற்றுமதி வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக தத்தமது சொந்த உள்நாட்டு நாணயங்களிலேயே மேற்கொள்வதற்கு வலுவான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுப் பணப் பரிவர்த்தனை முறை: மேற்கத்திய தடைகளை எதிர்கொள்ளும் விதமாகவும், கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டண அமைப்புகளை உருவாக்க பிரகடனம் வழிவகை செய்கிறது.
  • இருப்பினும் உடனடியாக ஒரே பிரிக்ஸ் பொது கரன்சி கொண்டுவருவதற்கு பதிலாக, நடைமுறைக்கு சாத்தியமான இருதரப்பு கரன்சி வர்த்தகத்தையே நாடுகள் முன்னிலைப்டுத்தி உள்ளன.

BRICS New Delhi Declaration | We reaffirm our commitment to the BRICS spirit of mutual respect and understanding, sovereign equality, solidarity, democracy, openness, inclusiveness, collaboration and consensus. Building on two decades of BRICS, we further commit ourselves to… pic.twitter.com/h2Q9N7S86h

— ANI (@ANI) September 12, 2026

மேலும் படிக்க | Explained : 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்! இனி என்ன ஆகும்?

3. தன்னிச்சையான வர்த்தக வரிகளுக்கு எதிர்ப்பு

  • சர்வதேச வர்த்தக அமைப்பின் (WTO)  விதிகளை மீறி, வளரும் நாடுகள் மீது விதிக்கப்படும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் கூடுதல் வர்த்தக வரிகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
  • தடையற்ற வர்த்தகம், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் நிலையான விநியோகச் சங்கிலி உறுதி செய்யப்பட வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

4. உலக அமைப்புகளில் கட்டமைப்பு மாற்றம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்  (UNSC) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பல தசாப்த கால பழைய கட்டமைப்பிலேயே இயங்குவதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரகடனம், அதில் விரிவான கட்டமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டம் என முழங்கியுள்ளது.

வளரும் நாடுகளை உள்ளடக்கிய குளோபல் சௌத் நாடுகள், வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் உலக விதிகளை உருவாக்கும் விதியைத் தீர்மானிப்பவர்களாக மாற வேண்டம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

5. இந்தியாவின் ராஜீய வெற்றி

உறுப்பினர் நாடுகளிடையே நிலவிய முரண்பட்ட அரசியல் பார்வைகளை ஒருங்கிணைத்து, 2023ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டைப் போன்றே இந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் அனைவரையும் உடன்பட வைத்துப் பிரகடனத்தை இறுதி செய்திருப்பது இந்தியாவின் முக்கிய ராஜீய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் அமைப்பு எந்தவொரு குறிப்பிட்ட மேற்கத்திய நாட்டிற்கும் எதிரானது அல்ல; மாறாக, சமநிலையான உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தளம் என்பதை இந்தியா மீண்டும் உலகிற்கு உணர்த்தி உள்ளது.

மேலும் படிக்க | Explainer: சீன அதிபரின் இந்திய வருகை.... BRICS உச்சிமாநாட்டையும் தாண்டி 4 காரணங்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
India