எஸ்பிஐ வங்கியில் சைபர் தாக்குதல்... டார்க் வெப்பில் கசிந்த வாடிக்கையாளர் விவரங்கள் - என்னாச்சு?
பாரத ஸ்டேட் வங்கியில் இணையவழி ஊடுருவல் ஏற்பட்டு, சுமார் 3,897 வாடிக்கையாளர்களின் தனிநபர் மற்றும் கடன் விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) இணையவழி ஊடுவருவல் நடைபெற்றதாகவும், இதனால் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாகவும் ராயட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அன்று வாடிக்கையாளர் தரவுகள் கசிந்திருக்கலாம் என அச்சுறுத்தல் புலனாய்வு சேவை வழங்குநர், பாதுகாப்பு சைபர் முகமை மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு ஆகியவை சந்தேகம் எழுப்பும் வகையில் தங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டதாக எஸ்பிஐ தெரிவித்தது.
கசிந்த தரவுகள் என்னென்ன?
எஸ்பிஐ வங்கி அளித்துள்ள தகவலின்படி, வாடிக்கையாளர்களின் பெயர்கள், கைபேசி எண்கள், பிறந்த தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள், வசிப்பிட முகவரிகள், பிராண்ட் மற்றும் வாடிக்கையாளர் அடையாளங்கள், அத்துடன் கடன் தொடர்பான பதிவுகளும் டார்க் வெப்பில் கசந்துள்ளகாக முதற்கட்ட மதீப்பில் தெரியவந்துள்ளது.
3,75,000 ஆணவங்கள்...
குறிப்பாக, டார்க் வெப்பில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்திதில் வங்கியின் முக்கிய செயல்பாடுகளையோ, நிதி செயல்திறனையோ அல்லது வணிகத் தொடர்ச்சியையோ இந்த இணையவழி ஊடுருவல் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
முக்கிய வணிகச் செயல்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி வழக்கம் போல் இயங்கி வருகின்றன என எஸ்பிஐ தெரிவித்திருக்கும் நிலையில், வங்கி தனது இணையவழித் தாக்குதல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
அதேநேரத்தில் கசிந்த தரவுகளின் நம்பகத்தன்மை, அதுகுறித்த முழு விவரங்கள், கசிவுக்கான மூலத்தை கண்டறிதல், கசிவின் அளவைத் தீர்மானித்தல், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுதல் உள்ளிட்டவைக்கு ஒரு விரிவான விசாரணை தேவை என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
3,897 வாடிக்கையாளர் பதிவுகள் மீது விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், வங்கி அதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்தது.
நிதி நிறுவனங்களை குறிவைத்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஒழுங்குமுறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள ஒரு காலகட்டத்தில் இந்த மீறல் நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை ஆணையம், கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் பாங்க் ஆப் பரோடா அதன் 1 TB வாடிக்கையாளர் தரவுகள் கசிந்ததும் நிகழ்ந்தது.