SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

"100 நாட்களில் அரசை மதிப்பிட முடியாது".. Zee 24 மாநாட்டில் மே.வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உரை!

மேற்கு வங்கத்தில் தொழில் வளர்ச்சி, ஊழல் விசாரணை, மக்கள் நலன் உள்ளிட்ட 6 முக்கிய இலக்குகளை அரசு முன்னெடுக்கும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்தார்.

Written By R Balaji
Published: Aug 25, 2026, 05:49 PM IST | Updated: Aug 25, 2026, 06:50 PM IST
Join

Zee 24 Ghanta நடத்திய மாநாட்டில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பங்கேற்றார். அப்போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

"100 நாட்களில் மதிப்பிட முடியாது" - மேற்கு வங்க முதலமைச்சர்

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, "அரசின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் வெறும் 100 நாட்களை கொண்டு மதிப்பிட்டுவிட முடியாது. கடந்த கால பாதுப்புகளை சரி செய்ய வேண்டிய தருணம் இது. அரசுப் பொறுப்பேற்றபோது, முந்தைய அரசு மாநிலத்தை முழுமையாக திவால் நிலைக்கு தள்ளியிருந்தது தெரியவந்தது. மேற்கு வங்கம் இனி தன்னிறைவு மற்றும் சுயசார்பு கொண்ட மாநிலமாக மாற வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

3 புதிய குழுக்கள் அமைப்பு

மாநில நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்காக மூன்று புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்.

தொழில் கொள்கை குழு: மாநிலத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் கொள்கையை உருவாக்குவதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் மற்றும் ஊழல் விசாரணை குழுக்கள்: முந்தைய அரசால் எடுக்கப்பட்ட சட்டவிரோத முடிவுகள் மற்றும் ஊழல் புகார்களை முழுமையாக விசாரிக்க மேலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இக்குழுக்களுக்கு தபஸ் ராய், ஸ்வபன் தாஸ்குப்தா மற்றும் மனோஜ் அகர்வால் ஆகியோர் தலைமை வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடந்து திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பேசிய அவர், "முந்தைய முதலமைச்சர் அனைத்து விவகாரங்களிலும் திருப்திப்படுத்தும் அரசியலையே முன்னெடுத்து வந்தார். ஆனால், எங்களது புதிய அரசு அத்தகைய வாக்கு வங்கி அரசியலில் ஒருபோதும் ஈடுபடாது," என கூறினார்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழக விவகாரம்: கடும் எச்சரிக்கை

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், "பல்கலைக்கழகச் சுவர்களில் தேசவிரோத முழக்கங்கள் எழுதப்பட்டிருந்த சில வீடியோக்களை நான் பகிர்ந்திருந்தேன். கிஷன்ஜியின் ஆதரவாளர்களுக்கோ அல்லது நக்சல் ஆதரவாளர்களுக்கோ மேற்கு வங்கத்தில் இடமில்லை. ஆசாதி என்பது எதற்காக? இத்தகைய பிரிவினைவாத சிந்தனை கொண்ட நக்சல்களுக்கு மேற்கு வங்கத்தில் எப்போதும் இடமளிக்கப்படாது," என எச்சரித்தார்.

மாநில அரசின் 6 முக்கிய இலக்குகள்

மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக 6 முக்கிய இலக்குகளை முதலமைச்சர் வெளியிட்டார்:

1. நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தல்.
2. அரசியலமைப்பு வழங்கிய பொறுப்புகளை நிறைவேற்றுதல்.
3. அனைத்து மத்திய அரசுத் திட்டங்களிலும் மேற்கு வங்கத்தை இணைத்தல்.
4. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துதல்.
5. மூன்று அடுக்கு வேலைவாய்ப்பு முறையை உருவாக்குதல்.
6. நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியை ஏற்படுத்துதல்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் மேற்கு வங்கத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவதே அரசின் முக்கிய நோக்கம் என முதல்வர் தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES