• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /வெறுங்காலில் 1600 மீட்டர் ஓடிய பெண்! அதுவம் சேலையில்..இவர் கதையை கேட்டா புல்லரிக்குது

வெறுங்காலில் 1600 மீட்டர் ஓடிய பெண்! அதுவம் சேலையில்..இவர் கதையை கேட்டா புல்லரிக்குது

ஒரு பெண், ஊர்க்காவல் படையில் சேருவதற்காக, கிட்டத்தட்ட 1600 மீட்டர் ஓட்டத்தை சேலை அணிந்தபடி வெறுங்காலில் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 08, 2026, 08:51 AM IST|Updated: Oct 08, 2026, 09:01 AM IST
joinshare
வெறுங்காலில் 1600 மீட்டர் ஓடிய பெண்! அதுவம் சேலையில்..இவர் கதையை கேட்டா புல்லரிக்குது
Image Credit: Viral Video | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ராகு பார்வை ஆரம்பம்.. அடுத்த சில மாதங்களுக்கு இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!

ராகு பார்வை ஆரம்பம்.. அடுத்த சில மாதங்களுக்கு இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!

2

Tamil News LIVE : நானா படேகர் மறைவு, சிஜேபி போராட்டம், தமிழ்நாட்டில் கனமழை, முக்கிய அப்டேட்ஸ்

3

வெறுங்காலில் 1600 மீட்டர் ஓடிய பெண்! அதுவம் சேலையில்..இவர் கதையை கேட்டா புல்லரிக்குது

4

8வது ஊதியக் குழு: சம்பள உயர்வு, பதவி உயர்வு.... அஞ்சல் துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

5

திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண், கவிதா குமாரி.  இவர்தான், எப்படியாவது ஊர்க்காவல் படையில் சேர்ந்து விட வேண்டும் என்று விடாமுயற்சியோடு, வெறுங்காலில் 1600 மீட்டர் தூரத்தை வேங்கையென வேகமாக கடந்த காட்சி, இணையத்தில் பல தரப்பினரிடையே வரவேற்பை பெற்ற காணொளியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவல் இதோ..

கணவனை இழந்த பெண்:

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்ட்த்தை சேர்ந்த கவிதா குமாரிக்கு கணவர் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கவிதாவுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர், வயது முதிர்ந்த மாமனார், மாமியார் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் காப்பாற்றும் ஒற்றை பொறுப்பு, கவிதாவிடம் இருக்கிறது.

Barefoot. In a saree. Under the scorching sun. 🇮🇳 Kavita, a widowed mother from Ramgarh, Jharkhand, ran 1,600m for a Home Guard job — without shoes, spikes or a tracksuit. And she cleared the physical test with top marks. ❤️ She was running for a better future for her children https://t.co/MqMArRu2bC

— Omkara (@OmkaraRoots) October 7, 2026

தன் ஊரில், ஊர்க்காவல் படையில் ஆட்தேர்வு நடப்பதாக தெரிந்து கொண்டார், கவிதா. வருவாய்க்கு வேறு வழியில்லை என்பதால், எப்படியாவது ஊர்க்காவல் படையில் சேர வேண்டும் என்று வைராக்கியத்தை வைத்த இவர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து, பின்னர் உடல் திறன் தகுதி தேர்வுக்கே சென்று விட்டார். இங்குதான், இவர் பலர் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் படிக்க | “தந்தை போன்ற பாசத்தில்” மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில்..காங்.எம்எல்ஏ விளக்கம்!

வெறுங்காலில் ஓடிய பெண்:

வழக்கமாக, இது போன்ற உடற்தகுதி தேர்வுக்கு செல்பவர்கள், டிராக் சூட், ஷூ போன்றவற்றை போட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். இந்த தகுதி தேர்வுக்கும் அப்படித்தான் பல பேர் வந்திருந்தனர். ஆனால், அனைவரது கண்களும், ஷூ இல்லாத கால்களுடன் புடவைக்கட்டிக்கொண்டு ஓட தயாராக இருந்த கவிதா மீதுதான் இருந்தது. “இவர் எப்படி ஓடப்போகிறார்..?” என அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கையில், கவிதா கட்டியிருந்த சேலையோடும் வெறுங்காலிலும் அந்த 1600 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். இந்த ஓட்டத்தை சுமார் 10 நிமிடத்தில் ஓடி முடித்தாலே போதுமாம். ஆனால், அவர் “எனக்கு அவ்ளோ நேரமெல்லாம் வேனாம்” என்று கூறுவது போல வெறும் 6 நிமிடத்தில் ஓடி முடித்தார். இவரது இந்த ஓட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் கவிதாவை பாராட்டி வருகின்றனர்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக..

கவிதா, தன்னுடைய மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, ஊர்க்காவல் படையில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, இந்த அளவிற்கு வேகமாக ஓடியதாகவும், அந்த உந்துதலே தன்னை ஓட வைத்ததாகவும் கூறியிருக்கிறார்.

நெட்டிசன்கள் பலர், “இது தன் குழந்தைகளுக்காக எதையும் செய்யும் ஒரு தாயின் ஓட்டம்” என்று நெகிழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். அவருக்கு எப்படியேனும் அந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: சம்பள உயர்வு, பதவி உயர்வு.... அஞ்சல் துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
India