SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

துருவ் ராத்தீ கைது... தீவிரமடையும் CJP போராட்டம் - டெல்லியில் பரபரப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியினர் போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில், பிரபல யூ-ட்யூபர் துருவ் ராத்தீயை, குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.

Written By Sudharsan G
Published: Oct 10, 2026, 10:51 AM IST | Updated: Oct 10, 2026, 11:53 AM IST
Join

CJP Jantar Mantar Protest, Dhruv Rathee Detained: குருகிராம் செக்டார் 56இல் யூ-ட்யூபர் துருவ் ராத்தீயை அவரது இல்லத்தில் இருந்து டெல்லி போலீசார் இன்று கைது செய்யப்பட்டார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி இன்று போராட்டம் அறிவித்திருந்ததை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவே அவர் ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | CJP Protest: மெட்ரோ, இணையம் முடக்கம்... உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்! ஸ்தம்பித்த டெல்லி!!

துருவ் ராத்தீயை விடுவிக்க கோரிக்கை

துருவ் ராத்தீ அவரது X பக்கத்தில் நேற்று (அக். 9) பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றில், டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க இருப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

துருவ் ராத்தீயின் இல்லத்திற்கு 50 போலீசார் வருகை தந்த நிலையில், பெரும் பரபரப்புக்கு இடையே அவரை காவலில் எடுத்துள்ளனர். அவரை கைது செய்ததற்கு காக்ரோச் ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளது.

யார் இந்த துருவ் ராத்தீ?

பிரபல யூ-ட்யூபரான துருவ் ராத்தீ இந்திய அரசியல் சூழல் குறித்து விரிவான பார்வை கொண்டவர். அரசியல் சார்ந்த வீடியோக்கள் யூ-ட்யூப் தளத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. மத்திய பாஜக அரசின் மீது தொடர்ந்து விமர்சனப் பார்வையை முன்வைத்து வருபவர் ஆவார். இவருக்கு யூ-ட்யூப் தளத்தில் 3.3 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். X தளத்தில் 33 லட்சம் பாலோயர்களும், இன்ஸ்டாகிராமில் 1.92 கோடி பாலோயர்களும் உள்ளனர்.

மேலும் படிக்க | விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?

சிஜேபி தலைவர்களும் கைது

அந்த வகையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி உள்ளிட்ட மாணவர்கள் போராட்டம் அறிவித்தனர். இதில் பங்கேற்பதற்காக கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்து சேர்ந்தார்.

துருவ் ராத்தீ மட்டுமின்றி தற்போது சிஜேபியின் முக்கிய தலைவர்கள் அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரையும் போலீசார் தடுப்பு காவலில் எடுத்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து விமானம் இவர்கள் டெல்லி வந்தனர். அவர்களை விமானத்திலேயே தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார், அங்கிருந்தே அவர்களை தடுப்பு காவலில் எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 ஆயிரம் போலீசார் குவிப்பு

எஸ்ஐஆர் நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டியும், அதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி கட்சியினர் இன்று அறிவித்துள்ளனர். ஆனால் டெல்லி போலீசார் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் பல்வேறு மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நள்ளிரவில் 400க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுப்பு காவலில் எடுத்துள்ளனர். டெல்லிக்கு நுழைய இருந்த நூற்றுக்கணககான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றி சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் மத்திய ஆயுத படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | 57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES