குற்றாலத்திற்கும், செங்கோட்டைக்கும் பயணிக்கும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை நான்கு ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமும் செங்கோட்டைக்கு திருநெல்வேலியில் இருந்தும், மதுரையில் இருந்தும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்ட மக்களின் விரைவான மற்றும் குறைந்த செலவிலான பயணத்திற்கு இந்த ரயில் சேவைகள் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை நான்கு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1/5
மதுரை கோட்டம் அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தென்காசி - செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள 503வது ரயில்வே கேட் லெவல் கிராஸ்ஸிங் பகுதிக்கு மாற்றாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டும் பணியின் போது கார்டர்கள் பொருத்துவதற்காக ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை ரயில் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2/5
மதுரை சந்திப்பு - செங்கோட்டை
மதுரை சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை (ரயில் எண்: 56771) ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது தென்காசி வரை மட்டுமே அடுத்த 3 நாள்களுக்கு அந்த ரயில் செல்லும். செங்கோட்டை வரை செல்லாது.
3/5
செங்கோட்டை - மதுரை சந்திப்பு
செங்கோட்டை - மதுரை சந்திப்பு பயணிகள் ரயில் சேவை (ரயில் எண்: 56772) ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய தேதிகளில் செங்கோட்டை - தென்காசி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். அதாவது அந்த ரயில் அடுத்த மூன்று நாட்களுக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படாது, தென்காசியில் இருந்து புறப்படும்.
4/5
திருநெல்வேலி - செங்கோட்டை
திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் சேவை (ரயில் எண்: 56773) ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். அதாவது திருநெல்வேலியில் இருந்து புறப்படும் அந்த ரயில் தென்காசி வரை மட்டுமே செல்லும். செங்கோட்டைக்கு போகாது.
5/5
செங்கோட்டை - திருநெல்வேலி
செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் சேவை (ரயில் எண்: 56774) ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய தேதிகளில் செங்கோட்டை - தென்காசி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் தென்காியில் இருந்து 3 நாள்களுக்கு புறப்படும்.